வாசலின் திறவுகோல் Jeffersonville, Indiana, USA 62-1007 1இக்கூடாரத்திற்கு நான் வந்திருப்பதை ஒரு சிவாக்கிய மாகக் கருதுகின்றேன். அது சற்று எதிர்பாராததும் கூட. இன்றிரவு இராப்போஜன ஆராதனை இரவு என்று எனக்குத் தெரியும், எங்காகிலும் அருகாமையில் இருந்தால் இராப்போஜனத்தில் கலந்து கொள்ள எனக்கு அதிக விருப்பம். ஏனெனில் அது.... கிறிஸ்தவர் அனைவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளுதல் அவசியம். ஏனெனில் கிறிஸ்துவே, “இதை நீ புசிக்காவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை'' என்று கூறியிருக்கிறார். எனவே இக்கூடாரத்திற்குள் வருவதென்பது எப்பொழுதுமே ஒரு அருமையான சிலாக்கியமாய் உள்ளது. சகோ தெவில் என்னிடம், இன்றிரயு அவருக்குத் தொண்டை சற்று கரகரப்பாயுள்ளதாகவும், நமது சபையோரிடம் எனக்குப் பேச விருப்பமுண்டா என்றும் கேட்டார். அப்படிச் செய்ய எனக்கு மிக மகிழ்ச்சி என்று நான் பதிலுரைத்தேன். இதை நான் உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்... 2நாளை இரவு தர்மகர்த்தாக்களின் கூட்டம் நடைபெறும். சபையிலுள்ள வர்த்தகர்களுக்கு வழக்கம் போல் திங்களிரவு அவர்களுடைய கூட்டம் இருக்கும், கான்ட்ராக்டரிடம் நாங்கள் ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் அனுப்பின பத்திரங்கள் அனுமதி பெற்றுவிட்டன. அதன் விளைவாக இந்த சபையின் கட்டிடத்தைக் கட்டுவதற்கு இப்பொழுது சாத்தியமாயுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அனுமதி பெற்றுள்ளதால், கட்டிடப் னயை ஒருக்கால் இவ்வார மே தொடங்கிவிடலாம். ஜெபர்ஸன் வில்லில் பத்திரங்களை சமர்ப்பித்தபோது, அனுமதி யளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர் எனவே நாங்கள் இந்தியானா போலீஸ் {Indianapolis) நாட்டிற்குச் சென்று அங்கு அனுமதி பெற்ாேம். நாங்கள் கட்டிடம் கட்டத் தொடங்கப் போகின்றோம். ஒருக்கால் இவ்வாரமே அப்பணி தொடங்கலாம், நாளை இரவு கூட்டத்திற்குப் பின்பு அது தெரிவிக்கப்படும். ஒருக்கால் இவ்வாரம் அப்பணி தொடங்க முடியாமற் போனால் - காண்ட்ராக்டருக்கு அது முடியாமல் போனால் - அவர் அடுத்த வாரம் தொடங்குவார். 3வரப்போகிற வாரமுடிவில் சனி இரவும், அடுத்த வாரம் ஞாறு காலையிலும், ஞாயிறு மாலையிலும் - அதாவது வரப்போன்ற சனி, ஞாயிறில் - கர்த்தருக்கு சித்தமானால், நாம் சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது போன்று, மூவரும் சேர்ந்த ஒரு கூட்டத்தை மறுபடியும் வைக்கலாம் என்றிருக் கிறேன். அது சனி இரவு, பிறகு ஞாயிறு காலை, ஞாயிறு இரவு நடைபெறும் - அதாவது இம்மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் தேதிகளில் அதற்குப் பிறகு நானும் இங்குள்ள சகோதரரில் சிலரும் வேட்டை பயணத்தை மேற்கொண்டு கொலராடோவுக்குச் செல்லவிருக்கிறோம். அதை முடித்துக் கொண்டு நாங்கள் திரும்பி வருவோம். இக்கூடாரம் கட்டி முடிந்தவுடன், கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு முழவாரம் எடுத்துக் கொண்டு, நான் இங்கிருந்து செல்லும் முன்பு, வெளிப்படுத்தின விசேஷத்தில் அடங்கியுள்ள ஏழு முத்திரைகளின் பேரில் பிரசங்கம் செய்ய விரும்புகிறேன். ஏழு சபை காலங்களைக் குறித்து நாம் பிரசங்கம் செய்தது போல். அதை தொடர்ந்து இப்பொழுது ஏழு முத்திரைகள். இன்னும் இரண்டு மூன்று வாரங்களில், இப்பணிக்கென்று நியமிக்கப்பட்ட மனிதன், இக்கூடாரத்தைக் கட்டி முடித்து விடுவாரென்று உறுதி கூறுகின்றனர் - இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குள். அப்பொழுது, இப்போதைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று பங்கு அதிகமானவர் அமருவதற்கென போதிய ஸ்தலம் உண்டாயிருக்கும். அந்த நேரம் வரும் வரை நான் காத்துக் கொண்டிருந்தேன். 4சென்ற சனி, ஞாயிறு தினங்களில், அந்தக் காட்சி பயங்கரமாயிருந்தது. கூடாரம் திறப்பதற்கு முன்பே, இடம் பிடிப்பதற்காக ஜனங்கள் பிற்பகல் 2 மணிக்கே வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்தனராம். அடுத்த நாள் காலையில், என் வீட்டினருகில் வசிக்கும் நர்ஸ் அம்மாள் ஒருவர், ''காலை ஐந்து மணிக்கே ஜனங்கள் திரளாக கூடாரத்தைச் சுற்றிலும் இருந்தனர்'' என்று என்னிடம் கூறினார்கள். உள்ளே நுழையும் போது'. ஜனங்களுக்கு ஆசனங்கள் இல்லாமல் போய்விடுகின்றது, எனவே அவர்கள் ஏமாற்றமடைந்து சென்று விடுகின்றனர். நின்று கொண்டிருப்பவர்கள், பிரசங்க பீடத்திற்கு செல்லும் வழியிலும், மற்றெல்லாவிடங்களிலும், திணிக்கப்பட்டது போல் அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருக்கின்றனர். ஸ்திரீகளும் வியர்வை சிந்த நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். ஆண்கள் எழுந்து நின்று பெண்களுக்கு இருக கைகளை அளிக்கின்றனர். கால்வலிக்கும் வரை அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். பின்பு வேறொருவர் எழுந்து நின்று அவர்களுக்கு இருக்கை தருவார். இப்படியாக அந்தக் காட்சியைக் காண்பதற்கே பரிதாபமாயுள்ளது - தாய்மார்கள் வியாதியுள்ள குழந்தைகளைத் தூக்கி நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள். 5ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி, இதைத் தவிர்க்கலா மென்று உத்தேசித்திருக்கிறோம். அப்பொழுது நமக்கு ஓர் நல்ல ஸ்தலம் இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் அழுது தடங்கல் செய்வதுண்டு. இப்பொழுது அதற்கென்று ஒரு இடம் அமைக்கப்படும். தாய்மார்கள் குழந்தைகளை அங்கு கொண்டு சென்று, அதே சமயத்தில் ஆராதனை நடைபெறுவதையும் கண்டு ஒலிபெருக்கியின் வழியாக பிரசங்கத்தையும் அந்த அறையில் இருந்து கொண்டே கேட்கலாம். ஞாயிறு பள்ளிக்கான அறைகள் போன்றவை முறையாகக் கட்டப்படும். கர்த்தருக்கு சித்தமானால், வரப்போகும் வாரத்தில் கட்டிடப்பணி தொடங்கும். 6நீங்கள் அனைவரும் நூறு சதவிகிதம் உங்கள் வாக்குகளை (Votes) அளித்து அதை ஆமோதித்தீர்கள். ஆகவே நாங்கள் இதைக் கட்டத் தீர்மானம் செய்தோம். சபையானது சுயாதி பத்தியம் பொருந்தியது (Sovereign). சபை என்ன கூறுகிறதோ, அதுதான் முடிவு தர்மகர்த்தாக்கள் அல்லது மற்றவர் கூறுவதல்ல. தர்மகர்த்தாக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மாத்திரமேயுண்டு. போதகருக்கும் அவ்வாறே ஒரு வாக்கு மாத்திரமேயுள்ளது. சபை தான் முக்கியம் வாய்ந்தது - சபையின் ஜனநாயகம், சபையின் அதிகாரத்துவம் (authority). முழு சபையுமே தன் கருத்தைத் தெரிவிக்கிறது. அவ்வளவு தான். அதை தான் நாங்களும் விரும்புகிறோம். ஏனெனில், நாம் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டுமென்று அதிகாரம் செலுத்துவதற்கு நமக்குப் பேராயரோ அல்லது பரம்பரை அதிகாரமோ (heirarchies) அல்லது கண்காணிப்பார் களோ கிடையாது. சபையிலுள்ள பரிசுத்த ஆவியானவர் பேசி முடிவெடுக்கிறார். இந்த நியதி எனக்குப் பிரியம். அது மிகவும் அருமையானது. 7'இந்தக் கூடாரத்தை விட்டுச் சென்று, ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டுவதற்குப் போதிய அளவு பணம் கிடைக்கும் வரைக்கும், நீங்கள் காத்திருக்க விரும்புகிறீர்களா?'' என்று தர்மகர்த்தாக்களின் குழுவினை வினவினேன். அவர்களால் எவ்வித தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. எனவே, பொது மேற்பார்வையாளர் (General Overseer) என்னும் ரீதியில், நான் சபையிடம் இதைக் கேட்க வேண்டுமென்று அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர், நான் சபையோரிடம், “”இக்கூடாரத்தை விரிவுபடுத்தி, எல்லாவற்றையும் வித்தியாச மாக அமைக்க, நம்மிடம் போதிய பணம் உள்ளது. வேண்டுமானால் உடனடியாக அதைச் செய்யலாம். இல்லாவிடில், வேறொரு ஸ்தலத்தில் பெரிய கூடாரத்தைக் கட்டுவதற்கென போதிய பணம் கிடைக்கும் வரை, இந்த பணத்தை நாம் சேமித்து வைக்கலாம்'' என்றேன் . அதற்காக வாக்குப் பதிவு ஒன்றை நாங்கள் நடத்தினோம். இக்கூடாரத்தை உடனடியாசு விரிவுபடுத்த வேண்டும்'' என்று அவர்கள் ஒருமனதாக தீர்மானம் செய்தனர். அவர்களுடைய தீர்மானத்தில் நாங்கள் நிலை நிற்கிறோம். 8ஜெபர்ஸன் வில்லிலுள்ள குழு அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நாங்கள் இந்தியானாபோலிஸுக்குச் சென்று, அந்நாட்டின் குழுவிடம் எங்கள் மனுவை சமர்ப்பித்தோம். அதை வரிவுப்படுத்த எங்களுக்கு உரிமையுண்டு என்று அவர்கள் தீர்மானம் செய்து எங்களுக்கு அனுமதியளித்தனர். எனவே இந்த பட்டினத்திற்கும் (ஜெபர்ஸன்வில்) அதற்கும் சம்பந்த மில்லை; (இந்தியானாபோலிஸ்) நாட்டிற்கும் அதற்கும் தான் சம்பந்தமுண்டு. எனவே, நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம். காண்ட்ராகடர் எங்களிடமிருந்து அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்டு விட்டார். எந்த நேரமும் அவர்கள் பணி தொடங்க ஆயத்தமாயுள்ளனர். நாளை இரவு ... அடுத்த வாரம் பணி தொடங்கப் போவதாக கான்ட்ராக்டர் கூறினால், ஏழு முத்திரைகளுக்காக வரும் வரை, நான் கூட்டங்களை ரத்து செய்து விடுவேன். ஆனால் அடுத்தவாரம் கான்ட்ராக்டர் பணி தொடங்க முடியாமல் போனால், நான் புறப்பட்டுச் செல்லும் முன்பு, வருகிற சனி, 'ஞாயிறுகளில் கூட்டங்களை நடத்துவேன். இந்த ஞாயிறன்று கூட்டங்களை வைக்கலாமென்று எண்ணியிருந்தேன். ஆனால் அன்றிரவு இராப்போஜன ஆராதனை இருக்குமென்று கேள்விப்பட்டேன். எனவே அன்று கூட்டம் வேண்டாமென்று தீர்மானித்தேன். ஏனெனில் ஜனக்கூட்டம் அதிகமிருந்தால், இராப்போஜனத்தை சௌகரியமாக ஆசரிக்க முடியாது. நமக்கு பெரிய கூடாரம் அமையும் போது அவ்வாறு வைத்துக் கொள்ளலாம். 9நமக்கு எதிர்கால ஜ்னாதிபதி கிடைத்திருக்கிறார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அந்த குழந்தை அண்மையில் ஹிக்கர்ஸன் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டது. கூடுமானால் பியானோ வாசிக்கும் சகோதரி வந்து, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்' என்னும் பாட்டிற்கோ, அல்லது அது போன்ற வெறெதாவதொரு பாட்டிற்கு சுருதி கொடுப்பார் -களானால் . அனேக காலமாக ஹிக்கர்ஸ்ன் குடும்பத்தினர் எதிர் பார்த்திருந்த இச்சிறு மேன்மகன் கடைசியில் வந்து விட்டான். மிகவும் அருமையான குழந்தை. உண்மையிலேயே அவன் ஹிக்கர்ஸன் குடும்பத்தினர்க்கு ஆபரணமாகத் திகழ்கிறான். அவர்கள் அனைவருமே நமக்கு ஆபரணமாயிருக்கின்றனர். அவர்களை நாம் நேசிக்கிறோம். உண்மையிலே அவர்கள் நம் சகோதரனும் சகோதரியுமாயிருக்கின்றனர். அக்குடும்பத்தில் இக்குழந்தை பிறந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கி றோம். அந்த குடும்பத்தை அது முற்றிலுமாக மாற்றி விட்டது. பிரதிஷ்டைக்காக அக்குழந்தையை பெற்றோர் - முன்னால் கொண்டு வரட்டும். சிறு பிள்ளைகளை இயேசுவானவர் தொட்டு ஆசீர்வதிக்கும் படிக்கு அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. 10'குழந்தை ஞானஸ்நானம்' என்பதை நம்புகிறவர் இவ்வுலகில் உள்ளனர். அவர்கள் . இச்சிறுவர்களுக்கு ஞானஸ் நானம் கொடுப்பதில்லை; தண்ணீரை மாத்திரம் அவர்கள் மேல் தெளிக்கின்றனர். அவ்விதம் செய்ததாக - குழந்தைகளை மாத்திரமல்ல, பெரியவர்களையும் கூட - வேதத்தில் சான்று எதுவுமில்லை. ஞானஸ்நானம் என்பது, கிருபை உள்ளில் கிரியை செய்தது என்பதை பகிரங்கமாய் அறிக்கையிடுதலாகும். சிறு குழந்தைகளுக்கு பாவத்தைக் குறித்த அறிவே கிடையாது. உலகத்தின் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் மரித்தார். குழந்தை மானிடப் பிறவியாக இவ்வுலகில் தோன்றும் போது, அதற்குத்தானாகவே பாவம் கிடையாது. எனவே மனந்திரும்ப அதற்கு அவசியமில்லை. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அதன் பாவத்தைப் போக்குகின்றது. குழந்தை பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, இவவுலகில் வந்து பொய்கைப் பேசு கிறது என்பது என்னமோ உண்மைதான், அவர்கள் சுபாவப்படி பாவிகள் . . ஆனால் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அதற்குப் பரிகாரமாய் உள்ளது. ஆனால் அந்த குழந்தை கணக்கொப்பு விக்கும் வயதுவரை வளர்ந்து, நன்மைக்கும் தீமைக்கும் வித்தி யாசம் அறியும் போது, அது செய்தவைகளுக்காக மனந்திரும்ப வேண்டிய அவசியம் உண்டாகின்றது. இப்பொழுதுள்ள பாவம், அது பாவத்தில் பிறந்ததனால் உண்டாயிருக்கும் பாவமே. அது ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தின் காரணமாய் மானிட வர்க்கம் அனைத்திற்கும் ஏற்பட்ட பாவமாகும். இயேசுகிறிஸ்து வின் இரத்தத்தின் மூலம் அந்த பாவம் தேவனால் போக்கப் பட்டது. இனிமேல் பாவம் செய்யும் வரைக்கும், மனந்திரும்பு வதற்கு அதனிடம் பாவம் ஒன்றுமில்லை. அது வளர்ந்து பாவம் செய்யும் போது, அதற்காக அது மனந்திரும்ப வேண்டும். அவ்விதம் மனந்திரும்பும் போது, அதுவே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஏற்ற தருணம். அப்பொழுது அவன் தண்ணீர் முழுக்கினால் ஞானஸ்நானம் பெறுகிறான். 11அதுவரைக்கும், வேதம் நமக்கு அளித்திருக்கும் கட்டளையை நாம் அனுசரித்து வருகிறோம். அதாவது, ''சிறு பிள்ளைகளை இயேசுவானவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத் தில் கொண்டு வந்தார்கள்.'' இந்த அருமையான பெற்றோர் இக்குழந்தையை இன்றிரவு போதகரிடத்தில் கொண்டு வந்துள் ளனர். நானும் அதை பிரதிஷ்டை செய்கிறேன். கிறிஸ்துவின் பிரதிநிதியின் கரங்களில் குழந்தையைத் தருவது என்பது, கிறிஸ்து வின் கரங்களிலேயே அதைத் தருவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் உணருகின்றனர். விசுவாசத்தினால் நாம் இக்குழந்தை யைக் கிறிஸ்துவினிடம் கொண்டு சென்று, இங்கு அதைத் தந்த தற்காக அவருக்கு நன்றி செலுத்தி அதை ஆசீர்வதிக்கும் படியாக தேவனிடத்தில் கேட்கப் போகிறோம். இதையே நாம் 'குழந்தை களின் பிரதிஷ்டை ' என்றழைக்கிறோம். 12என்னுடைய பிள்ளைகளுக்காக நான் இப்பொழுது எவ்விதம் உணர்ச்சி வசப்படுகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். எனது சிறுமி ஒருத்தி இன்றிரவு மகிமையில் இருக்கிறாள். இந்த பீடத்தில் தான் அவளும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். இன்றிரவு, பின்னால் அமர்ந்து கொண்ட ருக் கும் என் சிறு பையனும் பெண்ணும் இன்னும் ஞானஸ்நானம். பெறவில்லை. பெண்ணுக்கு பதினொன்று வயதாகி விட்டது. இன்று என் பெண் சாராளுடன் நான் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். என் மகன் ஜோசப்புக்கு ஏழு வயது தான் ஆகின்றது . ஞானஸ்நானம் பெறுவதற்கு அவன் இன்னமும் இளைஞனாகவே இருக்கிறேன். ஆனால் அவன் விருப்பம் கொண்டு, தேவன் அவன் இருதயத்தில் அந்த எண்ணத்தையருளினார் என்று கூறினால், அப்பொழுது அவனுக்கு நான் ஞானஸ்நானம் கொடுப்பேன். குழந்தைகளை நான் பிரதிஷ்டை மாத்திரமே செய்வேன். ஏனெனில் வேதம் அவ்வாறே போதிக்கின்றது. 13சகோ. நெவில், நீங்கள் என்னுடன் கூட இந்த அருமையான பையனிடம் நடந்து வருவீர்களானால் (சகோ பிரான்ஹாம்: சகோதரன். சகோதரி ஹிக்கர்ஸனை அணுகுகிறார் - ஆசி)... அவன் பெயர் ஹாலின் என்பதா? ஹாலின்? ஆம், ஹாலின் ஜுனியர், ஸ்டீபன் ஹாலின். அது மிகவும் அருமையானது. அவன் உறங்குகிறான் என்று நினைத்தேன். அதுவே ஹிக்கர்ஸன் குடும்பத்தினரின் தன்மையாகும் - நடந்து கொண்டிருப்பவைகளைக்காணாதவாறு கண்களை மூடிக்கொள்ளல் அன்றொரு நாள் இச்சிறுவனை நான் கண்டபோது அவனை 'ஜனாதிபதி' என்றழைத்தேன். அது அவனுக்குச் சிறிய பதவி யாகும். எப்படியிருக்கிறாய்? தேவபக்தியுள்ள எந்த ஒரு தாயாருக்கும் இது ஒரு பொக்கிஷம் என்று நானறிவேன். அப்படித்தான் நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா? மிகவும் அழகாயுள்ளது இப்பொழுது, சகோதர்ன் ஹிக்கர்ஸன், சகோதரி ஹிக்கர்ஸன் அவர்களே, கிறிஸ்துவின் ஊழியனும் உங்களுடைய போதகரும் என்னும் ரீதியில், விசுவாசத்தினால் இக்குழந்தையை இயேசு கிறிஸ்துவின் கரங்களுக்குக் கொண்டு செல்கிறேன். அவருடைய கரங்களில் இக்குழந்தையை வைப்பதற்கு நீங்கள் விரும்புவீர்கள். 14உங்கள் போதகரும் நானும், எங்கள் இருவரின் கரங்களைக் குழந்தையின் மேல் வைத்து நின்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாம் தலைகளை வணங்கி ஜெபிப்போம்: எங்கள் பரலோகப் பிதாவே, நீர் கரங்களை வைத்து ஆசீர்வதிக்கும்படி, சிறு பிள்ளைகளை உம்மிடம் கொண்டு வந்ததாக வேதத்தில் காணப்படுகிறது. ஆண்டவரே, உண்மையில் ஆவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீர் செய்தவைகளை உதார ணமாகக் கொண்டு, அதை பின்பற்ற வேண்டுமெனக்கருதி, வேதத்தைப் படித்து, அதன்படி கவனமாக நடக்க நாங்கள் முயன்று வருகிறோம். பெற்றோராகிய சகோதரன், சகோதரி ஹிக்கர்ஸன் அவர்கள் இந்த கூடாரத்தைச் சேர்ந்த அருமையான சீஷர்கள். அவர்கள் பாதுகாப்பில் நீர் வைத்தியக்கும் இந்த மகிழ்ச்சியை, அவர்கள் எங்களிடம் கொண்டு வந்துள்ளனர். ஆண்டவரே, அது உம்மிடமிருந்து வந்தது. இக்குழந்தையை நீர் தாம் அவர்களுக்குத் தந்தருளினீர்... இப்பொழுது இச்சிறு ஜீவனை அவர்கள் உம்மிடம் சமர்ப்பித்து, அது உமக்குத் தொண்டு செய்ய வேண்டு மென்று விரும்புகின்றனர். இக்குழந்தையை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். அதற்கு நீடிய ஆயுளை அருள்வீராக. கூடுமானால், உமது வருகையைக் காணுமட்டும் அது வாழட்டும். அது எங்கிருந்தா லும், அதை ஆசீர்வதிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். அது கிறிஸ் தவகுடும்பத்தில் பிறந்துள்ளது. அதுகிறிஸ்தவ குடும்பத்திலேயே தொடர்ந்து வளர்க்கப்படட்டும். கூடுமானால், இக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, பீடத்தில் நின்று கொண்டு பிரசங்கிப்பதைக் காண இவன் பெற்றோர் உயிர்வாழட்டும், வெள்ளை வீட்டில் (White House) அவனை ஜனாதிபதியாகக் காண்பதற்கு பதிலாக, இவ்வாறே அவனைக் காண அவர்கள் விரும்புவர். ஏனெனில் அவர்கள் உம் ஊழியர்கள் . இக்குழந்தையின் வாழ்க்கை தேவனுடைய ஊழியத்திற்கு அர்ப்பணிப்பாகவும், ஆசீர்வதமாகவும் இருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். பிதாவே, இக்குழந்தையை நீர் ஆசீர்வதிக்க வேண்டு கிறேன். தேவனுடைய கிருபை அதன் யேல் வரட்டும். வாழ் நாள் பூராவும் அது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அருள்புரியும் அவன் வளர்ந்து பெரியவனாவதைக் காண பெற்றோர் உயிர் வாழட்டும் என்று நாங்கள் மறுபடியும் வேண்டுகிறோம், உம் நாமத்தினாலே நாங்கள் ஆசீர்வதிக்கும் இவனை நீர் ஆசீர்வதியும் 15சிறு ஸ்டீபன் ஹாலின் ஹிக்கர்ஸனே, நாங்கள் வேண்டிக்கொண்ட ஆசீர்வாதங்கள் உன் மேல் வர , உன்னை இயேசுகிறிஸ்துவினிடம் ஒப்படைக்கிறோம். என் சிறு சகோ தரனே, நீ ஆரோக்கியமுள்ளவனாகவும், பெலமுள்ளவனாகவும் இருந்து, தேவனை மகிமைப்படுத்த வாழ்வாயாக! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக! நாம் வயோதிபராவதில்லை, வயோதிபராவதில்லை அத்தேசத்தில் நாம் வயோதிபராவதில்லை வயோதிபராவதில்லை வயோதிபராவதில்லை அத்தேசத்தில் நாம் வயோதிபராவதில்லை அது அற்புதமாயிருக்குமல்லவா? சிறுவர் வயது வந்த வர்களாயும் , வயோதிபர் வாலிபராயும் அங்கிருப்பார்கள். அது அற்புதமாள காரியமல்லவா? அங்கு நாம் வியாதிப்படுவ தில்லை, துயரம் அங்கு இருக்காது. நாம் ஒருக்காலும் அங்கு மரிக்க மாட்டோம். 16ஆராதனைகளைக் குறித்து சகோ . நெவில் அறிவித்தார். அக்கூட்டங்களைக் குறித்து நானும் நினைப்பூட்ட விரும்புகிறேன்; மறந்து போக வேண்டாம். திருமதி ஃபோர்ட் அம்மாள், அனேக ஆண்டுகட்கு முன்னர் நமது கூடாரத்திற்கு வருவது வழக்கம். சில நாட்கள் முன்பு, அவர்களை அவர்கள் மகளிடம் கொண்டு சென்றுவிட்டுவந்தேன். அவர்களுக்கு எண்பதுவயது நிரம் பிவிட்டது. கடந்த இரவு, எட்டு மணியளவில் என்று நினைக்கி அவர்களுடைய அடக்க ஆராதனையை நானும் போதகரும் புதனன்று, கூட்ஸ்(Coots)ஸிலுள்ள ஆலயத்தில் நடத்துவோம்வருகிற புதனன்று பத்தரை மணிக்கு . திருமதி ஃபோர்ட் ; அவர்களுடைய மற்ற பெயரை மறந்து விட்டேன்... திருமதி லேவி ஃபோர்ட், என் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள லாயிட் ஃபோர்ட்டின் தாயார் இலர்கள் . அந்த சிறுவர் சாரணரின்' (Boy Scouts) உடையை ஒருவர் எனக்காகப் பத்திரப்படுத்தினா ரென்றும், அதை நான் பெற்றுக் கொண்ட போது, கால் சட்டையில் ஒரு கால் மாத்திரம் இருந்தது! என்றும் எழுதியுள் ளேனே; அவருடைய தாயார் தான் இவர்கள். அந்த வயோதிய அம்மாளை நான் கொண்டு சென், ஜெபம் செய்து, வீட்டு விட்டு வந்தேன். கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்க அவர்கள் சென்று விட்டார்கள். 17கர்த்தருக்குச் சித்தமானால் - அடுத்த வார ஆராதனை களைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்பை இங்கு வைத்திருந் தேன்; அல்லது அப்படி நினைத்திருந்தேன். அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் ஆராதனைகளில் நான் எவைகளைக் குறித்து பேசப் போகிறேன் என்பதை எழுதி வைத்திருந்தேன், இந்த புத்தகத்திற்குள் அந்த குறிப்பை வைத்திருந்தேன், அதை வைத்தேனோ என்னவோ என்று எனக்கு ஞாபகமில்லை. ஆம், இதோ இங்கிருக்கிறது, கர்த்தருக்குச் கித்தமானால், சனி இரவு, ''ஒருவன் ஏன் மற்றொருவனின் வாழ்க்கையைப் பாதிக்கிறான்?'' என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன், ஞாயிறு காலை 'கூர்நுனிக் கோபுரம் சலைக்கல்லால் பொருத்தப்படுதல்'' என்பதைக் குறித்தும், ஞாயிறு இரவு , 'என் வழிகாட்டி என்ப தைக் குறித்தும் பேசப் போகிறேன், கர்த்தர்தாமே இவைகளை ஆசீர்வதித்து - நான் வெளியே சென்றிருந்த காரணத்தால் - எனக்கு உதவி செய்து இவைகளைப் பொருத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை அளிப்பாராக. 18இன்றிரவு துரிதமாக நாம் சில காரியங்களைப் பார்க்கலாம், எனக்குத் தபாலில் வந்த கடிதம் ஒன்றை பில்லி (Billy) சற்று முன்பு என் கையில் கொடுத்தான். சில சகோதரர்கள் ரிஷிகனில் (Michigan) இருக்கின்றனர் அங்குள்ள போதகர் சங்கத்திட மிருந்து இது வந்துள்ளது, அவர்கள் அனேக காரியங்களைக் கொண்டுள்ளனர், அவை தாம் காரியங்களைக் குழப்பி விடு கின்றன. நான் சிலரை அங்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் மனிதர் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு, ஆவிக்குரிய மனைவிகளை யடைய தேடிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், நான் தவறே செய்யாதவன் என்றும் போதிப்பதாகவும் இச்சங்கத்தினர் எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். நாம் இதுவரை கேள்விப் பட்டுள்ள காரியங்கனில் இது மிகவும் பயங்கரமானது, நான் தான் அவர்களை அங்கு அனுப்பினதாகவும், அது மிகவும் குழப்பத்தையுண்டாக்குகிறது என்றும் அவர்கள் எழுகியுள்ளனர். அவர்களில் சிலர், ஒரு மனிதன் இந்த மனைவியை விட்டு, அந்தப் பெண்னை விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனராம். அத்தகைய மூடத்தனமான போதகங்களை நாம் தரிப்பதில்லையென்று இச் சபை அறிந்திருக்கிறது. நாம் வேதத்தை விசுவாசிக்கிறோம். ஒருவன் ஒரு பெண்ணை தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பிறகு, மரணம் மாத்திரமே அவர்களை பிரிக்க முடியும் என்னும் நம்பிக்கையை நாம் கொண் டிருக்கிறோம் - மரணம் மாத்திரமே. அது போன்ற காரியங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சுயேச்சை அன்பிலும் (free love) எங்களுக்கு நம்பிக்கை கிடையாது, நாங்கள் வேதத்தை - அதை மாத்திரமே முற்றிலும் நம்புகிறவர்களாயிருக்கிறோம், எனவே இக்கடிதத்தை நான் பிரதியொன்று எடுத்து (Photostat), இதற்கான எனது பதிலையளித்து, அதைப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப் போகிறேன். அப்பொழுது காரியங்களை அது சரிவர கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். அது அவர்களுக்கு விடையளிக்கும், 19இன்றிரவு, நாம் வேதாகமத்தைத் திறக்கும் முன்பு கர்த்தரிடத்தில் பேசுவோம். எங்கள் பரலோட் பிதாவே, உம் கிருபையின் சிங்காசனத்தை நாங்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், அணுகுகிறோம். அந்த மகத்துவமுள்ளவர், தோடைய பொக்கிஷங்களிலுள்ள ஐசுவரியத்தை எங்களுக்குத் திறந்து காண்பிக்க, மதிமயை விட்டு இறங்கி வந்தார். தேவனை எங்களுக்கு மாமிசத்தில் வெளிப்படுத்தித் தந்த அந்த மகத்தான இயேசுவுக்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! அவர் மூலமாய் எங்கள் பாவங்களுக்கு மீட்பு உண்டு. நாங்கள் இப்பொழுது மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டோம். ஏனெனில் நாங்கள் அவரை விசுவாசிக்கிறோம். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட் படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' என்று அவர் கூறினதாக எழுதப்பட்டுள்ளதே! (யோவான் 5 : 24). 20ஆண்டவரே, உம் வார்த்தைகளை இன்றிரவு ஆசிர்வதித்துத் தாரும். இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள போகிறோம். கிறிஸ்தவர்கள் —- இராஜ்யத்தின் உடன் குடிமகன்கள் (Fellow Citizens}— பீடத்தைச் சுற்றிலும் ஒன்றுகூடி இராப்போஜனம்' என்று அழைக்கப்படுவதில் பங்கு கொள்ளப் போகின்றனர். நீர் எங்கள் பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறீர் என்பதன் அடை.... யாளமா நீர் கட்டளையிட்டபடியே, எங்களுக்காக நீர் வைத்துப் போயிருக்கும் இந்த இராப் போஜனத்தில் உம்முடைய வருகை மட்டும் நாங்கள் பங்கு கொண்டு வருகிறோம் எல்லா பொல்லாத சிந்தனைகளையும் எங்கள் இருதயங்களை விட்டகற்றி சுத்திகரியும். பிதாவே, உம் மகத்துவமுள்ள சித்தத்துக்கு விரோதமாய் நாங்கள் செய்தவை — அனைத்தையும் மன்னித்து, இன்றிரவு எங்களுக்குக் கிருபையருள் - வீராக. நாங்கள் வார்த்தையைப் படித்து அதைப் போதிக்கும் போது, வார்த்தையாகிய ஜீவ அப்பத்தை எங்களுக்குப் பிட்டுத்தாரும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம் . ஆமென். 21வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்திலிருந்து ஓரே ஒரு வசனத்தை மாத்திரம் படிக்க விரும்புகிறேன். 20-ம் அதிகாரம் முதலாம் வசனம். ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்.'' வெளி. 20: 1 இவ்வசனத்திலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொண்டு, அல்லது அந்த பொருளிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டு, 'வாசலின் திறவுகோல்' என்பதன் பேரில் அடுத்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் பேச விரும்புகிறேன். அதை திறவுகோல்கள்' என் ( நான் அழைக்க விரும்பவில்லை. ஏனெனில் பேதுருவுக்கே 'இராஜ்யத்தின் திறவு கோல்கள்' கொடுக்கப்பட்டன எனவே இதை, 'வாசலின் திறவுகோல்' என்று ஒருமையில் அழைக்கவே விரும்புகிறேன், இதைப் பற்றி பேசி முடித்தவுடன், நாம் இராப்போஜனம் ஆசரிக்கும் முன்பாக, அந்த இராப்போஜனத்தைக் குறித்து சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன். 22இப்பொழுது, ஒரு திறவுகோல். ஒரு தூதன் ஒரு திறவு கோலைத் தன் கையில் பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதாக, இப்பொழுது நாம் வாசித்த இந்த வசனத்தில் கவனித்தேன், வெளிப்படுத்தல் 13-ம் அல்லது 19-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன் , அங்கு வேறொரு தூதன் ஒரு திறவு கோலுடன் வருவதை நாம் காண்கிறோம், ஒன்றைத் திறந்து விடுவதே ஒரு திறவுகோலின் நோக்கம், ஏற்கனவே பூட்டப்பட்டுள்ள ஏதோ ஒன்றை அது திறந்து விடுகிறது, அல்லது பூட்டப்பட வேண்டிய ஒன்றை அது பூட்டுகின்றது. அந்த நோக்கத்திற்காகவே ஒரு திறவுகோல் கொடுக்கப் படுகின்றது. அனேக விதமான திறவுகோல்கள் உண்டு. ஏனெனில் திறவுகோல்களால் நமக்கு அனேக உபயோகங்கள் உள்ளன, உங்கள் சொந்த வீட்டிற்கு உங்களிடம் திறவுகோல் உண்டு, உங்கள் வாகனத்திற்கு ஒரு திறவுகோல் இருக்கின்றது. இவையனைத்தையும் நாம் திறவுகோல்கள்' என்றழைக்கிறோம் அவை திறவுகோல்களே... இந்த திறவுகோல்கள் எல்லாவற்றிற்கும் பொது திறவுகோல்' (Skeleton Key) ஒன்று செய்ய முடியும். நமது வீட்டிற்கும், சில சமயங்களில், நாம் பொது திறவுகோலை வைத்திருப்பது வழக்கம். இந்த திறவுகோல், ஒருவகையாக சுழலுவதன் மூலம், நெம்புகோலை (lever) விடுவித்து, கதவைத் திறக்கின்றது. அதை நாம் ' பொது திறவுகோல்' என்றழைக் கிறோம், அந்த திறவு கோல் அனேக திறவுகோல்களின் பணியைப் புரிகின்றது, அதைக் கொண்டு நமது வீடுகளையும் நமது கார் வாகனங்களையும் திறக்கலாம். அது ' பொது திறவுகோல்' 23நமது கைகளை உபயோகிக்காமல், எந்த ஒரு திறவு கோலும் எந்த ஒரு கதவையும் திறக்கமுடியாது. அதாவது, திறவு கோல் தானாகவே அந்த பணியைச் செய்யமுடியாது, அந்க திறவுகோலைச் சுழலச் செய்வதற்கு - ஏதோ ஒன்று அவசியமாயுள்ளது. இப்பொழுது நான் பேசிக்கொண்டிருக்கும் ஒலிபெருக் கிக் கருவியைப் போன்றது அது. யாராவது ஒருவர் அதன் வழி யாகப் பேசாவிட்டால், அது தானாகவே பேசமுடியாது. அதன் வரியாக ஏதாவதொன்று பேசப்படவேண்டும். எனவே, ஒலிப் பெருக்கிக் கருவி தாகைவே இயங்குவதில்லை. அதன் வழியாகப் பேசப்படும் சப்தம், காற்று அலைகளின் வழியாக ஒலிபெருக்கப் பட்டு, நமது செவிகளை அடைகின்றது. அவ்வாறே சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் விஷயத்திலும் கூட. போதகராகிய நாம், நாமாகவே சுவிசேஷத்தைப் பிரசங் கிப்பதில்லை. நாம் தேவனுடைய சத்தத்தை, நமது வழியாக, கேட்கிறவர்களிடம் அனுப்பும் கருவிகளாயிருக்கிறோம். 24தரிசனங்களும் அவ்வாறே அமைந்துள்ளன. ஏதாவது ஒரு தரிசனத்தை சபைக்கு எடுத்துக்கூற இப்பொழுது என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு தரி சனத்தை எனக்கு முதலில் காண்பிப்பாரானால், அது யாருக் காகக் காண்பிக்கப்பட்டதோ, அவருக்கு அந்த தரிசனத்தை நான் அப்படியே எடுத்துரைப்பேன். எனவே அது நானல்ல; தேவன் எனக்கு ஒரு தரிசனத்தை அருளினார். அந்த தரிசனத் தின் செய்தியை சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்படியே எடுத் துரைக்கும் கருவியாக மாத்திரம் நான் விளங்குகிறேன்... திறவுகோலும் அது போன்றது. மன்னிக்கவும், திறவுகோல் என்பது கதவைத் திறக்க வேண்டியவர் தமது கையில் பிடித்திருக்கும் ஒரு பொருளாகும். அது ஒருவரின் கையில் இருக்கவேண்டும். இன் றிரவு நான் பேசவிருக்கும் அந்த திறவுகோல், பிரத்தியேகமான ஒரு கையில் மாத்திரமே இருக்கும். அது தான் 'விசுவாசம்' என்னும் கை. அந்த ஒரு கை மாத்ரபோ இந்த திறவுகோலைப் பிடித்துக் கொண்டிருக்க முடியும் மற்ற கைகள் வெவ்வேறு திறவுகோல்களைப் பிடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த திறவுகோலை, விசுவாசம் என்னும் கை மாத்திரமே கொண்டிருக்க முடியும். 25அறிவைத் திறந்து பெற்றுக் கொள்வதற்கு ஒரு திறவு 'கோல் உண் . ஒருவன் அறிவைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பினால், அதற்கென்று ஒரு திறவுகோல் உண்டு. அதன் மூலம் அவன் அறிவைத் திறக்க முடியும். அவன் புத்தகங்களை அதிகம் படித்து, அறிவைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். யாரும் அவனுக்குப் பாடம் கற்பித்துத் தர முடியாது. ஒருக்கால் அவர்கள் கற்பித்துத் தரலாம், ஆனால் அவனும் படிக்க வேண்டும். அதைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே வழி, அந்த திறவுகோலை எடுத்து அதைத் திறப்பதேயாகும். அப்பொழுது அவன் தேடிக் கொண்டிருக்கும் அறிவு அவனுக்குப் யுலப்படுகின்றது. பியானோ கருவி வாசிக்கக் கற்றுக்கொள்ள விரும்புவோர் அனேகருண்டு. அவர்களுக்கு அதை வாசிக்கத் தெரியாது. பியானோ ஆசிரியர் பாடங்களுக்கு மேல் பாடங்களைக் கற்புக் கொடுத்தாலும், அவர்கள் அதைக் கற்றுக் கொள்வதில்லை. அதன் இரகசியத்தை வெளிப்படுத்தும் திறவுகோல் - அதாவது தாளம் எப்படி அமைகின்றது. பாட்டு எவ்விதம் தொனிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு திறவுகோல் - அவர்களுக்கு அவசியமாயுள்ளது. 26அவ்வாறே கணிதம் படிப்பதற்கும் ஒரு திறவுகோல் அவசியம். அதன் போக்கை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலர் ஒன்று முதல் ஒன்பது எண்கள் வரிசைகளை, விரல்விட்டு எண்ண, அவ்விதம் அனேக வரிசைகளின் தொகையை சிறிது நேரத்தில் கணக்கிட்டு சொல்லி விடுகின்றனர். ஆனால் என்னால் அவ்விதம் செய்யமுடியாது. என்னால் ஒரு வரிசை கூட கூட்ட -முடிவதில்லை. அதை எண்ணுவதற்கு போதிய விரல்களும் கட்டை லிரல்களும் இருந்தால் மாத்திரமே என்னால் முடியும். ஏனெனில் அதற்கான திறவுகோலை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை, ஆனால் சிலரிடம் அத்திறவுகோல் இருப்பதால், அதை எப்படி செய்ய வேண்டுமென்று அறிந்திருக்கின்றனர். அறிவுக்கு ஒரு திறவுகோல் உண்டு - அறிவைத் தேடிச் செல்லும் மனிதனுக்கு. விஞ்ஞான ஆய்வுக்கும் திறவுகோல் உண்டு. அது மகத்தான திறவுகோல். ஜனங்கள் அத்திறவுகோலை எதிர் நோக்கியிருக்கின்றனர். 27சில காலம் முன்பு, அணுக்கள் (atoms) இருக்கிற தென்றும், அவ்வணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளாக (moleeules ) ஆகிறதென்றும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, இந்த அணுக்களில் சக்தி (energy) அடங்கியுள்ளதென்றும் அவைகளை சுற்றவைத்து உடைத்தால், அதனுள் இருக்கும் சக்தியை அவிழ்த்து விடலாம் என்றும் அவர்கள் கண்டு பிடித்தனர். எல்லாமே அணுக்கள் ஒன்று சேர்வதால் உண்டானவை என்று நீங்கள் அறிவீர்கள். அங்குள்ள கம்பம் அணுக்களால் ஆனது. நீங்களும் அணுக்கள் ஒன்று சேர்வதால் உண்டானவர்கள். புல், மரம் எல்லாமே அணுக்களைக் கொண்டவை. அந்த அணுக்களை ஒரு பக்கமாக சுற்றவைத்து அதை உடைத்தால், அது நிர்மூலமாக்கும் சக்தியைப் பெற்றுவிடுகிறது. பெரிய பெரிய விஞ்ஞானிகள் மணிக்கணக்காக, வாரக்கணக்காக, ஆண்டு கணக்காக உழைத்து, அதில் வெற்றிகண்டனர். 28தாமஸ் எடிஸன் என்னும் விஞ்ஞானி என்று நினைக்கிறேன்-மின்சாரத்தின் மூலம் விளக்குகளை எரிய வைக்கும் அறிலை அவர் கொண்டிருந்தார் என்று ஜனங்கள் கூறுகின்றனர். அவர் தான் மின்சார விளக்குகளைக் கண்டு பிடித்தவர். அவர் இரவில் படுக்கைக்குக் கூட செல்லமாட்டாராம். அவர் சான்ட்விச் (Sandwich) ஒன்றை மாத்திரமே சாப்பிட்டு விட்டு, இதற்கென்று அரும்பாடுபடுவராம். அவருடைய சிந்தனையில் ஏதோவொன்று, அவரால் இதைச் செய்ய முடியுமென்று கூறிக் கொண்டேயிருந்தது. அது என்ன? அது தான் அந்த வழியைத் திறக்கும் திறவுகோல். 29சில ஆண்டுகட்கு முன்பு, சிறுவர்களுக்குக் காமிக் புத்தகங்கள் (comics) எழுதும் திறமை தமக்குள்ளதாக கான்ஸாஸ் பட்டினத்திலிருந்த ஒருவர் எண்ணினார். அவருடைய கைகளில் அதற்கான திறவுகோல் உள்ளதாக அவர் நம்பினார். அந்த பட்டினத்திலேயே மிகவும் பிரபலமான பத்திரிகையின் பதிப்பாசிரியரை அவர் அணுகி, தாம் எழுதினவைகளைக் காண்பித்தார். ஆனால் பதிப்பாசிரியரோ, ''ஐயா, அதற்கேற்ற திறமை உமக்கில்லை. எனவே முயற்சி செய்வதினால் பயன் ஏதுமில்லை.'' என்று கூறி அனுப்பிவிட்டார். ஆனால் அவருக்கு பதிப்பாசிரியரின் உரை திருப்தியளிக்கவில்லை. அதற்கேற்ற திறமை அவரிடமுண்டு என்னும் தன்னம்பிக்கை அவரில் குடிகொண்டிருந்தது. அவர் திரும்பத் திரும்ப முயற்சி செய்து பதிப்பாசிரியரிடம் சென்ற ஒவ்வொரு முறையும் தோல்வியே கண்டார். மற்ற இடங்களுக்கும் அவர் சென்சார். அவர்களும் கூட அவர் எழுதினவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். எனினும் தன்னால் முடியும் என்னும் தன்னம்பிக்கை அவரை விட்டு விலகவில்லை. பின்பு அவர் சபைக்குக் காமிக்குகள் சிலவற்றை எழுதியனுப்பினார். எலிகள் நிறைந்த மோட்டார் வண்டி நிறுத்தும் ஒரு கொட்டகையை (garage) அவர் வாடகைக்கு எடுத்தார். எலிகள் அங்குமிங்கும் ஓடின வண்ணமாக இருக்கும். அவர் எழுதின காகிதங்களின் மேலும் அவை ஓடின. ஒரு நாள் ஒரு சுண்டெலியின் விசித்திரமான தன்மை அவரைக் கவர்ந்தது. அதன் மூலம் மிக்கி சுண் டலி' (Mickey Mouse) என்னும் கதை பிறந்தது, அவர் தான் கோடிசுவரரான வால்ட் டிஸ்னி (Walt Disney) என்பவர். அவருடைய கையில் ஏதோ ஒன்று இருந்தது. அவர் அதைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதாக உறுதியாய் அறிந்திருந்தார். அதைச் செய்யமுடியும் என்னும் தன்னம்பிக்கை அவர் கொண்டிருந்தார். அப்படித் தான் ஒவ்வொரு மகத்தான சாதனைகளும் உருவாகின்றன. ஆண்களின் கைகளிலும், பெண்களின் கைகளிலும் இத்தகைய ஒன்று இருக்க நேர்ந்தால், தங்களால் செய்ய முடியும் என்னும் திடநம்பிக்கை அவர்களுக்கு உண்டாகின்றது. 30நமது நாட்டை இளம்பிள்ளை வாதம் (Polio) தாக்கின போது... அதை ஒழிக்கத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டுமெனும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளை வாதம் தாக்கின போது... நான் வீதியில் காரோட்டிக் கொண்டு சென்ற போது, லூயிவில்லிலுள்ள மருத்துவர் ஒருவர் பேசுவதைக் கவனமாகக் கேட்க நேர்ந்தது. அவர், ''லூயிவில்லை இளம் பிள்ளை வாதம் தாக்கின போது, என்னைப் போல் நீங்களும் அங்கு இருந்திருந்தால்—ஒரே நேரத்தில் ஐம்பத்தேழு சுவாசக் கருவிகள் (Respirators) இயங்கின, ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமியரும் இளம்பிள்ளை வாதத்தினால் தாக்கப்பட்டனர். அப்பொழுது ஒன்றுமே செய்யமுடியவில்லை. அத்தகைய ஒரு காட்சியை மீண்டும் காண நான் விரும்பவில்லை'' என்றார். ஆனால் விஞ்ஞானமோ, ''இளம்பிள்ளை வாதம் என்னும் பொல்லாத நோய் ஒன்றிருக்குமானால், அதைத் தடுக்க ஏதாவதொன்று நிச்சயமாக இருக்கவேண்டும்'' என்று சிந்தனை செய்தது, அவர்கள் அந்த நோயை எதிர்த்தனர். தீயணைக்கும் படையினர் தங்கள் பாதரட்சைகளுடன் தெருக்களில் நின்று கொண்டு, தங்கள் தொப்பிகளைக் கழற்றி பிச்சையெடுத்து, விடு தலையின் கதவைத் திறப்பதற்கான திறவு கோலை கண்டு பிடிக்க, தங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தனர். முடிவில் சால்க் (Salk) என்னும் பெயர் கொண்ட கிறிஸ்தவ சான்றோர். ஒருவர் தடுப்பு மருந்தை (Serum) கண்டு பிடித்தார். ஏன்? ஏனெனில் பொல்லாத நோய் ஒன்று தோன்றி மக்களைக் கொன்று போடுகின்றது. அதனின்று விடுபட, அதைத் திறக்க திறவுகோல் ஒன்று எங்கோ இருந்தது. சால்க் தடுப்பு மருந்து தான் அதற்கு சிறப்பான சிகிச்சை. ஓ, அந்த திறவுகோல் என்னவெல்லாம் செய்ய முடிந்தது! இந்த தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அதை உபயோகித்து இளம் பிளளை வாதத்தை அடியோடு ஒழிக்க முயன்று வருகின்றனர். அது “களைப்புறாமல் கொண்ட விடாமுயற்சி' 'யின் பலனாகும். அந்த திறவுகோல் எங்கோ இருந்தது. அந்த தடுப்பூசி போடுவதால் அது நிவர்த்தியாகும். அதை எப்படியாயினும் கண்டு பிடிக்க வேண்டுமெனும் தீர்மானம் கொண்டனர். 31மனிதரைக் கொல்லும் பயங்கர வியாதிகளான இளம் பிள்ளை வாதம், டிப்தீரியா, அம்மை, மஞ்சள்வியாதி {Yellow Fever), டெடனஸ் (Tetanus) போன்றவைகளுக்கு, விஞ்ஞானம் அயராது இரவும் பகலும் பாடுபட்டு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியுமானால், பாவமென்னும் சிறையில் அடைபட்டு கிடக்கும் மனிதனை விடுதலை செய்ய, இரட்சிப்பு என்னும் திறவுகோல், அந்த சிறையின் கதவைத் திறந்துவிட இருக்கின்றது என்பது அதிக நிச்சயமல்லவா? திறவுகோல் என்பது பொக்கிஷம் அடைத்திருக்கும் கதவின் பூட்டைத் திறக்கும் கருவியாகும், விலையுயர்ந்த பொருள் அதனுள் இல்லாவிட்டால், அதைப் பூட்டவேண்டிய அவசியமிராது; பூட்டப்பட வேண்டிய தகுதியை அது பெற்றிராது. அதை நீங்கள் பூட்டாமல் அப்படியே விட்டு விடுவீர்கள். எனவே தகுதி கொண்ட ஒன்றின் பாதையில் பிரவேசிக்கவே திறவுகோல் பயன்படுகின்றது. தகுதியுள்ள ஒன்றை அது திறந்து கொடுக்கிறது. 32யோவான் சுவிசேஷம் 10-ம் அதிகாரத்தில் இயேசு ''நானே ஆட்டுத் தொழுவத்தின் வாசல், நானே வாசல்'' என்றெல்லாம் கூறியுள்ளதாக நாம் வாசிக்கிறோம். அவர் ஒரு. வாசல் அல்ல; அவரே வாசல். அவரே இருக்கக் சு.டிய ஒரே வாசல். நானே வழியும் (ஒரே வழி) சத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். நானே ஆட்டுத் தொழுவத்தின் வாசம்.எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக் கிறார்கள்''. அவரே ஆட்டுத் தொழுவத்தின் வாசல். அவரே இரட்சிப்பின் வாசல். நம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் இல்லை எந்த சபையோ, ஸ்தாபனமோ, பிரமாணமோ; போதகமோ, வேறெதுவும் கிடையாது; இயேசுவின் நாமத்தின் மூலமாக மாத்திரமே இரட்சிப்புண்டு. அது தான் திறவுகோல், பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு அத்திறவு கோல்களில் ஒன்றை உபயோகித்ததில் வியப்பொன்றுமில்லை. வாசல் வழியாய் எவ்விதம் உட்பிரவேசிக்கலாம் என்பதை அவர்கள்“ அறிய விரும்பினர். எனவே பேதுரு அந்த திறவுகோலை உபயோகித்தான். ஒரே ஒரு வாசல் மாத்திரம் இருப்பதனால், ஒரு திறவுகோல் மாத்திரமேயுள்ளது. ''நானே வாசல்'' அந்த வாசலின் திறவுகோல் பேதுருவிடமிருந்தது. அவன், நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என் றான். அதுவே வாசலைத் திறக்கும் திறவுகோல், இயேசுவே அந்த வாசல். 33சமாதானத்துக்கும் ஒரே ஒரு வாசல் மாத்திரமே யுள்ளது. ஆம், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்'' (யோவான் 12: -27), உண்மையான சமாதானத்துக்கு அவர் ஒருவரே வாசல், உங்களுக்கு சமாதானம் இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். நீங்கள் போதிய பணம் சேர்த்து வீட்டை வாங்கலாம். உங்கள் பிள்ளைகளுக்குத் துணிமணிகள் வாங்கவும், உண்பதற்கு ஆகாரம் வாங்கவும், நீங்கள் போதிய பணம் சேமித்து வைத்திருக்கலாம், ஜனங்களிடையே நீங்கள் அதிகம் கீர்த்தி வாய்ந்தவராயிருக்கலாம். ஆயினும், உங்கள் பாதரட்சைகளைக் கழற்றி விட்டு, நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, ஒன்று மாத்திரமே உங்களுக்குச் சமாதானத்தையளிக்க முடியும்.. அதாவது, அன்றிரவு மரித்துப் போவீர்கள் என்று நீங்கள் அறிந்திருந்தால், ஒன்று மாத்திரமே உங்களுக்குச் சமாதானத்தை அளிக்க வல்லது. அதுவே நமது சமாதான காரணராகிய இயேசுவாகும். அவரே நமது சமாதானம். அவரே நமக்குச் சுகமளிப்பவர். உன் தேவனாகிய கர்த்தர் நானே உன் நோய்களையெல்லாம் குணமாக்குவேன்'' அவரே பரலோகத்தின் வாசல். இயேசுகிறிஸ்துவின் மூலமே அல்ல மல், பரலோகத்திற்குள் பிரவேசிக்க வேறு வாசல் அல்லது வழி கிடையாது. அவரே பரலோகத்தின் வாசல். இயேசு எல்லாவற்றிற்கும் வாசலாய் இருக்கிறார். அந்த வாசலைத் திறக்க விசுவாசம் என்னும் திறவுகோல் உள்ளது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்திற்கும் இயேசுவே வாசலாயிருப்பாரெனில், அவர் ஏற்கனவே முடித்திருக்கும் கிரியைகளில் நாம் பெற்றிருக்கும் விசுவாசமானது, தேவனுடைய இராஜ்யத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் திறந்து நமக்களிக்கும் திறவுகோலாய் உள்ளது. பார்த்தீர்களா? அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் திறக்கும் திறவுகோல் விசுவாசமே, விசுவாசம் என்னும் திறவுகோல் அதைத் திறக்கின்றது - அவர் செய்து முடித்துள்ள கிரியைகளின் பேரிலுள்ள விசுவாசம். இந்த திறவுகோலைக் குறித்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 34எபிரேயர் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள விசுவாச வீரர்களைக் குறித்து வரிசையாக இங்கு எழுதி வைத்திருக்கிறேன். வாசலின் திறவுகோல் சிங்கங்களின் வாய்களை அடைத்தது. விசுவாசம் என்னும் திறவுகோல் தான் சிறைச் சாலைகளின் வாசல்களைத் திறந்தது. விசுவாசம்-விசுவாசம் என்னும் திறவுகோல் - அக்கினியின் உக்கிரத்தை அவித்தது, பட்டயக்கருக்குக்குத் தப்பச் செய்தது, மரித்தோரை உயிரோடெழச் செய்தது. ஜீவனுள்ள தேவன் பேரிலுள்ள விசுவாசம் என்னும் திறவுகோல் தான் அப்படிச் செய்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஸ்திரீயும் தங்கள் கரங்களில் விசுவாசம் என்னும் திறவுகோலை எடுத்துக் கொண்டு, தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் திறக்க முடியுமானால்-உன்னிடம் அந்த திறவுகோல் இல்லையென்றால், நீ தடவிக் கொண்டிருப்பாய். அதை உன்னால் ஒருபோதும் திறக்க முடியாது. நீ கதவை அடிக்கலாம். ஏனெனில் இந்த திறவுகோல்... பூட்டிலுள்ள நெம்புகோலின் (lever) அமைப்டை அனுசரித்து, திறவுகோலின் உருவம் அமைந்துள்ளது. சரியான ஒரு திறவுகோல் அந்த நெம்புகோலைத் திறக்கும். ஆனால் பூட்டிலுள்ள அனேக நெம்புகோல்களில் ஒரு நெம்புகோல் திறவாமல் போனாலும், காரியம் கெட்டுவிடும். 35அது போன்று, நான் முழு சுவிசேஷத்தையும், தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். அதுவே தேவனுடைய வல்லமையை அவிழ்த்து, ஜனங்களுக்கு ஆசிர்வாதத்தைக் கொண்டுவரும். வாசலின் திறவுகோல் அதைத் திறக்கின்றது. ஓ, அந்த மகத்தான வீரர்கள், அந்த தீர்க்கதரிசிகள் , வேதத்தில் கூறப்பட்டுள்ள அந்த மகத்தான மனிதர்கள்-அவர்கள் அனைவரிடமும் இந்த திறவுகோல் இருந்தது. அதன் காரணமாக அவர்களால் சிங்கங்களின் வாய்களை அடைக்கவும், அக்கினியின் உக்கிரத்தை அவித்துப் போடவும், பட்டயக்கருக்குக்குத் தப்பவும், மரித்தோரை உயிர் பெறச் செய்யவும், இன்னும் அனேக அற்புதங்களைச் செய்யவும் முடிந்தது. ஏனெனில் அவர்கள் திறவுகோலைத் தங்கள் கைகளில் பிடித்திருந்தனர். அது திறக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில் அது வேதத்தின் மூலம் பிறந்த திறவுகோல். நான் ஸ்தாபனப் பிரமாணம் (creed) என்னும் திறவுகோலை உபயோகித்து தடவிக் கொண்டிருந்தால், அது என்ன செய்யும் என்பதை அறியாதவனாய் ருப்பேன். 'என் ஸ்தாபனம் இதைக் கூறுகிறது' என்று அவர்கள் சொன்னால், அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. 36ஆனால் வேதம் அதைப் போதித்து, விசுவாசம் என்னும் திறவுகோலை என் கையில் பிடித்துக் கொண்டு, என் இருதயம் “அது தேவனுடைய வார்த்தை'' என்று கூறுமானால், அது அக்கினியின் உக்கிரத்தை அவித்துப் போடும்; அது பிணியாளிகளுக்குச் சுகத்தைத் திறந்து கொடுக்கும். இழந்து போனவர்களுக்கு அது இரட்சிப்பைத் திறந்து கொடுக்கும். அவருடைய நாமத்தில் நான் அந்த வாசலண்டையில் வர வேண்டும். ''வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும், அவையெல்லாவற்றையும் அவருடைய நாமத்தில் செய்யுங்கள்''. நீ கையில் வைத்துக் கொண்டிருப்பது விசுவாசம் என்னும் திறவுகோல் என்பதை அறிந்திருக்க வேண்டும். அது வேதத்தின் மூலம் தோன்றின திறவுகோல். அது ஸ்தாபன பிரமாணத் திறவுகோலாக இருந்தால், அது என்ன செய்யுமென்று எனக்குத் தெரியாது. அது வேதத்தின் திறவுகோலாக இருந்தால், அது கண்டிப்பாகத் திறக்கும் ஏனெனில் தேவன் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆகவே, அக்கினியின் உக்கிரத்தை அவித்துப் போடல் போன்ற செயல்களை அவர்கள் புரிந்ததில் வியப்பொன்றுமில்லை. அவர்களிடம் திறவுகோல் இருந்தது. 37ஒரு முறை தேவன் அந்த தீர்க்கதரிசிகளுக்கு 'இதை செய்' என்று கூறும் வகையில் தலையசைத்தால், எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர் என்னிடமோ அல்லது உங்களிடமோ (அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்) பல முறை கூறுவது போல், அவர்களிடம் கூற வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. என்னிடம் அவர், 'இதை செய்' என்று கூறுவார்; நான் இடறி விழுவேன். அவர் என்னிடம், 'நீ இதை சரியாகச் செய்யவில்லை. ஆகவே மறுபடியும் செய்' என்பார். அத்தகைய சந்தர்ப்பம் அந்த தீர்க்கதரிசிகளுக்கு உண்டாயிருக்க வில்லை. அவரிடமிருந்து ஒரு சிறு தலையசைத்தல் போதும். உடனே, இதை தான் நீங்கள் செய்ய வேண்டும்' என்று ஆவியானவர் அவர்களிடம் கூறுவதை அவர்கள் உணர்ந்தனர். வேறெதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சகோதரனே, அவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், அக்கினியை அவித்துப் போட்டார்கள், எல்லாவற்றையும் செய்தார்கள். தேவனிட மிருந்து ஒரு சிறு தலையசைத்தல் போதுமானதாயிருந்தது. ஏனெனில் மகத்தான விசுவாசம் என்னும் திறவுகோலை அவர்கள் கைகளில் வைத்திருந்தனர். தேவனுக்காக அவர்கள் இத்தகைய செயல்கள் புரிந்தனர். எதுவும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஓ, எவ்வளவு மகிமையானது! 38ஒரு முறை ஒரு வாலிபன் தேவபக்தியுள்ள ஒரு வயோதிப சகோதரனிடம் வந்தான். அந்த வயோதிபர் தேவனுடைய தீர்க்கதரிசி. அவர் எப்பொழுதும் தேவன் நல்லவர் என்பதைக் குறித்தும், தேவனுடைய செயல்களை, இயேசுகிறிஸ்துவின் செயல்களை சாட்சியாக அறிவித்துக் கொண்டிருப்பதை இந்த வாலிபன் கேட்டான். இவன் ஊழியத்திற்காக அபிஷேகம் பண்ணப்படவேண்டியவன். அவன் தேவபக்தியுள்ள அந்த வயோதிபரை அணுகி, ''ஐயா, உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்'' என்றான். அவர், 'வாலிபனே, கேள்'' என்று பதிலுரைத்தார். அவன், 'நீர் கூறும் அளவிற்கு இயேசு உண்மையிலேயே உங்களுக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தவரா?'' என்று கேட்டான். அவரோ, 'என்னால் கூற முடிவதைக் காட்டிலும் அதிகமாக அவர் எனக்கு முக்கியம் வாய்ந்தவர்'' என்று பதிலளித்தார். பார்த்தீர்களா? அது என்ன? அவர் திறவுகோலைக் கண்டு பிடித்துவிட்டார். அப்பொழுது அந்த வாலிபன், 'நீர் கூறுவது உண்மையானால், அதே இயேசுவை நானும் உண்மையாகவே கண்டு கொள்ள விரும்புகிறேன்'' என்றான். அது என்ன? வயோதிபரின் கையில் அந்தத் திறவுகோல் உள்ளது என்றும், அதைக் கொண்டு அவரால் திறக்கவும் பூட்டவும் முடியுமென்றும் இந்த வாலிபன் கண்டுகொண்டான். 39உங்களுக்குத் தெரியுமா? பூட்டும் திறவுகோல் தான் திறக்கவும் செய்யும். பாருங்கள்? நீங்கள் கட்டவிழ்க்கலாம், அல்லது கட்டலாம். அது உண்மை. பூட்டும் அதே திறவுகோல் தான் திறக்கின்றது. அவ்வாறே திறக்கும் அதே திறவுகோல் தான் பூட்டவும் செய்கின்றது. அது இருவழிகளிலும் பணிபுரிகின்றது, அதைக் குறித்த தரிசனத்தை ஸ்தாபனங்கள் காலங்கள் தோறும் இழந்து விட்டிருப்பது எவ்வளவு பரிதாபகரமானது சபையானது தன்னை ஸ்தாபனப்பிரமாணங்களுக்கு விற்றுப்போட்டது எவ்வளவாக வருந்தத்தக்கது! இன்றைக்கும் நாம் அதை தான் செய்து வருகிறோம், இப்பொழுது எல்லோரும் ஒன்றுசேர வேண்டுமெனும் அழைப்பு விடுவிக்கப்படுகின்றது. அந்த மகத்தான ரோமன் கத்தோலிக்க மார்க்கமும் மற்றவரும் எந்த அடிப்படையில் ஒன்று கூடப் போகின்றனர் என்பதை நாம் காணும்போது, அவர்கள் சில திட்டங்களை மாற்றி அமைக்கப் போகின்றனர் என்று நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் எதையும் மாற்றப் போவதில்லையென்று இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் எப்படியாயினும் அவர்கள் மாற்றப் போகின்றனர். போப்பாண்டவர். கொண்டுள்ள ஆதிக்கத்தை அவர்கள் ஒவ்வொரு போதகருக்கும் அளிக்கப் போகின்றனர்அவர்கள் எங்கிருந்தாலும் சரி. சபையானது தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தன்னை ஸ்தாபன கோட்பாடுகளுக்கு விற்றுப் போட்டது எவ்வளவு பரிதாபமான செயல்! பாருங்கள், அங்கு தான் அவர்கள் தங்கள் திறவு கோலைத் தொலைத்துவிட்டனர். அதன் விளைவாக, ஜனங்க ளின் மத்தியில் இன்று அற்புதங்களும் அடையாளங்களும் காணப் படுவதில்லை. இதற்கு முன்பு அவை உண்டாயிருந்தன. அவர்கள் திறவுகோலைத் தொலைத்து விட்டனர். ஆம்., வாசல் அங்குள்ளது என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆனால் அடுத்தபடியாக அந்தக் கதவைத் திறப்பதற்கு அவர்களிடம் திறவுகோல் இருக்க வேண்டும். அந்த கதவுக்குப் பின்னால் பொக்கிஷங்கள் 2.ள்ளன. அவை பூட்டப்பட்டு, அவிசுவாசியின் கண்களுக்கு மறைவாயுள் ளன ஆனால் விசுவாசியோ, விசுவாசம் என்பதைக் கொண்ட வனாய், விசுவாசம் என்னும் திறவுகோலைக் கையிலெடுத்து, இந்த கதவைத் திறக்க முடியும். ஆம், ஐயா. 40சில ஆண்டுகட்கு முன்னர் ஒரு சுவிசேஷக சகோதரன் இங்கு வாழ்ந்து வந்தார். ஆப்பிரிக்காவுக்குச் செல்ல அவருக்கு அழைப்பு உள்ளதாக அவர் எண்ணினார். அவர் ஒரு வாலிபர். அவருக்கு மனைவியும், ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு வயதான இரு அழகான பெண் குழந்தைகளும் இருந்தனர். அவர்களை விட்டுப்பிரிய இந்த வாலிபருக்கு மனதில்லை. அவர் ஒரு போதகர். அவருக்கு நல்ல சபை ஒன்றிருந்தது. ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டுமெனும் அழைப்பை மறுக்கவும் அவருக்கு மனமில்லை. இரவும் பகலும் இதைக் குறித்து அவர் ஜெபம் செய்து வந்தார். அவருக்குப் போக மனதில்லை. ஆனால் தேவனோ, 'நீ போக வேண்டும்' என்று அவருடன் பேசிக் கொண்டே வந்தார். முடிவில் அவர் போகத்தான் வேண்டுமெனும் நிலைக்கு வந்து விட்டார். 41எனவே அவர் சுவிசேஷகர்களை அனுப்பும் தமது குழு விடம் (Mtssion Board சென்று, 'ரொடீஷியாவின் காடுகளில் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார்'' என்று கூறினார். அந்த காட்டில் மலேரியா ஜுரம் பரவியிருந்தது மாத்திரமின்றி அது அதிக வெப்பம் கொண்டதாயும், கொள்ளை நோயாலும், தொழுநோயாலும் பாதிக்கப்பட்டதாயுமிருந்தது அவர் தமது வீட்டையும் எல்லா உடமைகளையும் விற்றுவிட்டார். சுவிசேஷகர்களை அனுப்பும் குழு அவரைச் சோதிக்க எண்ணி, ''நீர் ஸ்திரமாக அவ்விதம் விசுவாசிக்கின்றீரா?'' என்று வினவினர். அவர், 'நிச்சயமாக' ' என்று விடையளித்தார்... அவர்கள், “ஐயா, உமக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகளும், அழகிய மனைவியும் இருக்கின்றனர் என்று நினைத்துப்பார்த்ததுண்டா? நீர் ஏன் முதலில் அவ்விடம் சென்று? அந்த ஸ்தலம் எப்படியுள்ளது என்று பார்த்து விட்டுத் திரும்பி வரக்கூடாது?'' என்று கேட்டனர். அவரோ, இல்லை. நான் போகவேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். அது உண்மை. உண்மையில்என் குடும்பத்தையும் சபையையும் விட்டுப் போக எனக்கு மன மில்லை. ஆனால் அந்த காட்டிற்குப் போகவேண்டுமென்று தேவன் கட்டளையிட்டிருக்கிறாரே'' என்றார். 42அவர்கள் தொடர்ந்து, 'ஐயா, உங்கள் பெண் குழந்தைகளை மஞ்சள் ஜுரமோ (Yellow fever) அல்லது கறுப்பு நீர் ஜூரமோ (Black water fever) பீடித்து ஒரே இரவில் மடிந்து போகக் கூடும் என்று உமக்குத் தெரியுமா?'' என்று கூறிவிட்டு, அங்கு சென்று தடுப்பு ஊசியின்றி அனேக வியாதிகளால் பீடிக்கப் பட்டு மரித்தவரின் பெயர் பட்டியலைக் கூறினார்கள். அவர்கள் மேலும், ''உங்கள் மனைவியும் பிள்ளைகளும் தொழுநோயால் பீடிக்கப்பட்டதாகக் கற்பனை செய்து பாருங்கள் அங்கு உஷ்ணம் வேறு அதிகம். அப்படிப்பட்ட ஸ்தலத்திற்கு உங்கள் மனைவி யையும் பிள்ளைகளையும் கொண்டு செல்வது அபாயகரமானது என்று நீர் எண்ணுவதில்லையா?'' என்றனர். அங்கு நின்று கொண்டிருந்த அந்த வாலிப மிஷனரியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் திரும்பிப் பார்த்து - அவர்களிடம், 'என் சகோதரரே, தேவனுடைய அழைப்பின் தரிசனத்தை நான் பெற்றிருக்கிறேன். உண்மையில் தேவன் என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைத்திருப்பாரானால், என் மனைவியும் பிள்ளைகளும் மற்றெல்லா இடங்களை விட ஆப்பிரிக் காவில் அதிக பாதுகாப்பாக இருப்பார்கள்'' என்று பதிலளித் தார். ஆமென். அது என்ன? அவருடைய அழைப்பின் திறவு கோலை அவர் கொண்டிருந்தார். அவர் என்ன பேசினாரோ, அதைக் குறித்த விசுவாசம் அவருக்குண்டாயிருந்தது. ' என்ன வீரமான பதில்!' என்று எண்ணினேன். அதை நான் முதன் முறையாகக் கேட்டபோது, என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கினது. தொழுநோயாலும் கொள்ளை நோயாலும் பீடிக்கப்பட்ட அந்த ஸ்தலத்திற்கு கர்த்தர் என்னை அழைத்திருப் பாரானால், உலகிலுள்ள மற்றெல்லாவிடங்களைக் காட்டிலும் அங்கு அதிக பாதுகாப்பாக இருப்பார்கள்''. அவரிடம் திறவுகோல் இருந்தது. 43உங்களிடம் திறவுகோல் இருந்தால், உங்களுக்கு எவ்வித பயமும் சந்தேகமும் இராது. எந்த ஒரு கேள்வியும் உங்களில் எழாது. இதைக் குறித்து நீங்கள் யாரிடமும் ஆலோசனை கேட்கவேண்டிய அவசியமிராது. உங்கள் கைகளில் அந்த திறவுகோல் இருப்பதன் காரணத்தால், என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். பூட்டின் நெம்புகோல் களை நீங்கள் பரிசோதித்து விட்டு, சரியான திறவுகோல் உங்க ளிடம் உள்ளதென்றும், பூட்டில் திறவுகோலை நீங்கள் பொருத்தி னவுடனே. அது உடனடியாகத் திறக்குமென்றும் உங்களுக்குத் தெரியும். ஸ்தாபனம் மாத்திரம் திறவுகோலை வைத்திருந்தால்! ஸ்தாபனம் மாத்திரம் விசுவாசம் என்னும் திறவுகோலை வைத்தி ருந்தால், எந்த கதவையும் அதனால் திறக்க முடியும்- எந்த வியாதியையும் எந்த வாதையையும். நம்மிடம் அந்த திறவு கோல் இருக்குமானால் அவை நமக்குத் திறக்கப்படும். இப் பொழுது நாம் குறிப்பிட்ட அந்த மனிதன் அவருடைய அழைப் புக்குரிய திறவுகோலை கொண்டிருந்தார். 44எனது சொந்த சாட்சியைக் கூறுவதனால் மன்னிக்கவும். பதினைந்து, பதினேழு ஆண்டுகட்கு முன்னர், அவர் அக்கினி ஸ்தம்பமாக இறங்கி வந்து அந்த நதிக்கரையில் என்னுடன், ''இந்த செய்தியை நீ உலகெங்கும் கொண்டு செல்லவேண்டும்'' என்று கூறினார். அந்த அக்கினிஸ்தம்பத்தின் புகைப்படத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். கிரீன்ஸ் மில் (Greens Mill) என்னும் ஸ்தலத்தில் அவர் என்னிடம் பேசினது என் ஞாபகத்திற்கு வருகிறது. இதை என் போதகருக்கு அறிவித்தேன். அவர். பில்லி , அன்றிரவு நீ என்ன உணவு அருந்தினாய்? நீ தீயகனவு (Nightmare) கண்டிருக்கிறாய்'' என்றார். அவர் , உன் வேலைக் குத் திரும்பச் செல் . நீ பொதுஜன ஊழியர் கம்பெனியில் நல்ல வேலையில் அமர்ந்திருக்கிறாய். மகனே, உன் வேலையை நீ பாது காத்துக் கொள்'' என்றார். ஆனால் அது என்னை ஒன்றும் அசைக்கவில்லை. சுகமளிக்கும் ஆராதனைகளை நான் நடத்தத் தொடங் கிய போது, அன்று காலை, தாவீது கோலியாத்தைச் சந்திக்கச் சென்றபோது' என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் செய்தது உங்களில் அனேகருக்கு நினைவிருக்கலாம். 45அவர்கள் என்னிடம், இந்த நவீன விஞ்ஞான காலத்தில், எல்லாவித மருத்துவ ஆராய்ச்சிகளும் நமக்கிருக்கின்றன சிறந்த மருத்துவர்கள் - நம்மிடையே உள்ளனர். சபையும் அனேக ஆண்டுகள் முன்பே தெய்வீக சுகமளித்தலை. மறந்து விட்டது. அப்படியிருக்க, இந்த பெரிய இராட்சதனை நீ எவ் விதம் சந்திக்கப் போகின்றாய்? மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரெஸ்பிடேரியன்கள், ஏன் பெந்தேகோஸ்தேயினரும் கூட, தெய்வீக சுகமளித்தலை அனேக ஆண்டுகள் முன்பே மறந்து விட்டு, தங்கள் ஸ்தாபன பிரமாணங்களில் நுழைந்திருக்க, இவர்களை எங்ஙனம் நீ முகமுகமாய் சந்திக்கப் போகின்றாய்? உன்னை ஆதரிக்க ஸ்தாபனம் எதுவும் இல்லையே! பில் (Bill) , நீ என்ன செய்யப் போகின்றாய்?'' என்று கேட்டனர். ஆனால் இதொன்றும் என்னைக் கலங்கச் செய்யவில்லை. ஏனெனில் என் கையில் ஒரு திறவுகோலை நான் பிடித்திருந்தேன். அவர்களோ, உன்னால் முடியாது, யாரும் உன்னை நம்பமாட்டார்கள்'' என்றனர். நான், ''எனக்குக் கவலையில்லை. ஒன்றுமாத்திரம் எனக்கு நிச்சயமாகத் தெரியும். தேவன் என்னை அழைத்திருக்கிறார். அவர் அழைத்ததனால் நான் போக வேண்டும்'' என்றேன். நான் திறவுகோலைப் பிடித்திருந்தேன். அவர் என்னை அழைத்தார். அவர் எனக்குக்காண்பித்தார். அவர் என்னிடம். கூறினார். அவர் எனக்குக் கட்டளை கொடுத்தபோது, அவருடைய சமூகத்தை நான் கண்டேன். திறவுகோல் அங்கிருந்தது. போதகர், ஏழாம் வகுப்பு கல்வியை மாத்திரம் பெற் றிருக்கும் நீயா இராஜாக்களுக்கும் சக்கிரவர்த்திகளுக்கும் முன்னால் பிரசங்கம் செய்து ,ஜெபம் செய்யப் போகின்றாய்?'' என்று கேட்டார். ''அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது' என்று விடையளித்தேன், 46கடந்த ஆண்டு இந்த நேரத்தில், அல்லது ஓரிரண்டு -வாரங்களுக்கு முன்பு, நான் இந்த சபைக்கு வந்த போது, கர்த்தர் எனக்குத் தரிசனமளித்து, நான் வேட்டைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்பொழுது நாற் பத்திரண்டு அங்குலம் நீளமான கொம்பையுடைய மிருகம் ஒன்றைக் காண்பேன் என்றும் அவர் என்னிடம் கூறினதாக உங்களிடம் சொன்னேன் (அது எங்கு படுத்துக் கொண்டிருக்கு மென்றும், எந்த நிலையில் படுத்திருக்கு மென்றும் அவர் எனக்குக் காண்பித்தார்), அந்த ரஸ்தாவில் செல்லும் போது, வெள்ளி முனை உரோமமுடைய கரடியை நான் கொல்லப் போகின்றேன் என்று அவர் கூறினார். நான் அவ்விடம் சென்று, அங்குள்ள மனிதனிடம் கேட்டபோது அவன், அவ்வித மிருகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட கரடி எதுவும் நான் இதுவரை கண்டதில்லை'' என்று பதிலளித்தான். நான், ''இங்கு எங்காகிலும் அது இருக்கத்தான் வேண்டும்'' என்றேன். அவன், 'காடிகள் உள்ள ஸ்தலத்திற்கு இப்பொழுது நாம் செல்லவில்லை. நாம் மரங்கள் அடுக்கியிருக்கும் ஸ்தலத் தைக் கடந்து மேல் நோக்கி ஆடுகளுக்காக சென்று கொண் டிருக்கிறோம்' என்றான். நான் அவனுடன் சென்றேன். 47இரண்டாம் நாளன்று, ஆண்டவர் கூறின அதே இடத்தில் அந்த மிருகம் படுத்துக் கொண்டிருந்தது. நான் அதைச் சுட்டுக் கொன்றேன். நாங்கள் அதன் தோலையுரித்து, அதன் கொம்புகளை எடுத்துக் கொண்டோம். அவன் என்னிடம், ''உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன் மூன்று நாட்களுக்கு முன்பு நாம் பாளயத்தை விட்டுப் புறப்பட்ட போது, வெள்ளி முனை உரோமம் கொண்ட இந்தக் கரடியை நீங்கள் சுடப்போவதாக ரஸ்தாவில் வந்து கொண்டிருக்கும் போது நீர் என்னிடம் கூறினீர் அல்லவா?'' என்றான். நான், “அது கர்த்தர் உரைத்ததாவது'' என்றேன். அவன், அதை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் என் சகோதரன் காக்கைவலியால் அவதியுற்றான். நீங்கள் அவனை அதற்கு முன்பு கண்டதில்லை. ஒரு முறை இம் மலையின் மேல் நீங்கள் இருந்த போது, ஒரு பிரத்தியேக காரியத்தை நான் செய்யும் போது அவன் சுகமடைவான் என்று என்னிடம் கூறினீர்கள். அவ்வாறே அவன் சுகம் பெற்றான். ஆலை சகோ தரன் பிரான்ஹாமே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். மலையின் கீழுள்ள மரங்கள் இருக்கும் ஸ்தலம் வரை என்னால் இங்கிருந்து காணமுடிகின்றது. குதிரைகள் நிற்பதை மாத்திரம் நான் காண்கிறேன். வேறொன்றும் அங்கு காணப்படவில்லை. புல் அல்லது கற்பாறை எதுவும் காணப்படவில்லை. மரங்கள் அடுக்கியிருக்கும் தலத்திற்கு ஒரு மைல் உயரத்தில், இரண்டு அங்குல கனத்திற்கு பாசி மாத்திரம் படர்ந்துள்ளது. அந்த கரடி எங்கேயிருக்கும்?'' என்று கேட்டான். நான், “தேவன் யேகோவாயீரே. அங்கு கரடி இருக்கும் என்று அவர் கூறினால், அது கண்டிப்பாக அங்கு இருக்கும்'' என்றேன்.'' 48நாங்கள் மலையின் கீழ் இறங்கி வரும்போது, ஒவ்வொரு அரை மைல் தொலைவிலும் அவன், 'கரடி வர நேரம் வந்து விட்டதா?'' என்று கேட்பான். நான், ' கவலைப்படாதே, அது இங்கு தான் இருக்கும்' என்பேன். குதிரைகள் இருக்கும் இடத்திற்கு 500 கெஜம் தூரம் நாங்கள் வந்தபோது, எங்கள் முதுகில் பளுவு இருந்ததனால் நாங்கள் இளைப்பாற வேண்டியிருந்தது. அவன் சுற்று முற்றும் பார்த்து விட்டு, என் முகததை உற்று நோக்கினான். அவனுடைய முகத்தை நான் கண்ட போது, அவன் உள்ளத்தில் சந்தேக உணர்ச்சி இருந்தது போல் தோன்றினது. அது அங்கிருக்கும் என்னும் நம்பிக்கை அவனுக்கிருந்தது. ஆனால் அவனிடம் தறவு கோல் இல்லை. தேவனுடைய கிருபையினால் அவர் ஒரு முறைகூட என்னிடம் தவறினதில்லை வெள்ளிமுனை உரோமம் கொண்ட கரடி அங்கிருக்கும் என்று அவர் கூறினார். என்னிடம் திறவுகோல் இருந்தது. அவருடையை வார்த்தையை நான் சற்றேனும் சந்தேகிக்கவில்லை. நான் திரும்பி , பட் (Bud), அது அங்கு நிச்சயம் இருக்கும்'' என்று கூறினேன். நான் கூறிவிட்டு திரும்பிப் பார்த்தபோது, எங்களுக்கு மேல் அரைமைல் உயரத்தில் அந்த கரடி நின்று கொண்டிருந்தது. அவன் தூரப்பார்வை கண்ணாடியை எறிந்துவிட்டு, “ பில்லி, என்னைக் காப்பாற்றும். அது பெரிய வெள்ளிமுனை உரோமம் கொண்ட கரடி'' என்று அலறினான் பாருங்கள், அந்த திறவுகோல் , தரிசனம், தேவனு டைய வார்த்தை - அதை எதுவும் மாற்றவோ அல்லது நிறுத் தவோ முடியாது. இன்று சபைக்கு அவசியமானது கல்வியல்ல. சபைக்கு இன்று அவசியமானது ஸ்தாபனமல்ல. சபைக்கு இன்று அவசியமானது ஸ்தாபனப் பிரமாணங்கள் அல்ல. இன்று சபைக்குத் தேவையானது வாசலாகிய வேதவாக்கியங்களை திறப்பதற்கான திறவுகோல். கிறிஸ்துவே வாசல் . அவரே வார்த்தை . ஜீவனுள்ள தேவனின் வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம் ஒவ்வொரு கதவையும்திறந்து கொடுக்கும். ஆண்டவரே, எங்களுக்கு அந்த திறவுகோலைத்தாரும், எங்களுக்கு அந்த திறவுகோலைத் தாரும். 49எபிரேயர் 12ம் அதிகாரம், ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்திருக்க பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு...'' என்று கூறுகின்றது. அங்கு “பாவம' என்பது 'அவிசுவாசத்தைக் குறிக்கின்றது. பாருங்கள்? - பாவம் என்பது ஒன்று மாத்திரமே. அதுதான் அவிசுவாசம். 'பாவம்' என்னும் பதம் குறிதவறல்' என்று அர்த்தங்கொள்ளும். நீங்கள் துப்பாக்கியால் சுடும்போது இலக்கு தவறினால், உங்கள் துப்பாக்கியைச் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் தவறு ஏதோ இருந்த காரணத்தால் தான் குறிதவறினது. நீங்கள் முன்பிருந்த நிலைக்குத் துப்பாக்கியைக் கொண்டுவந்து, மறுபடியும் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் கிறிஸ்தவனாயிருக்க விரும்பி, ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொண்டால், நீங்கள் குறிதவறிவிட்டீர்கள். நீங்கள் கிறிஸ்தவனாயிருக்க விரும்பி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தெளிப்பு ஞானஸ்நானம் பெற்றால், நீங்கள் குறிதவறிவிட்டீர்கள். நீங்கள் மீண்டும் - பழைய நிலைக்கு வாருங்கள். இல்லையேல், நீங்கள் மறுபடியும் குறிதவறிவிடுவீர்கள். நிச்சயமாக குண்டு இலக்கைவிட்டு அகன்று சென்றுவிடும். சரியான இலக்கில் உங்களை வைக்கக்கூடியது ஒன்று மாத்திரமே. அதுதான் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருக்கும் வேதாகமம். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. எனவே, தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசம் என்னும் திறவுகோலைக் கையில் பிடித்துக் கொள்ளுங் கள். நீங்கள் விசுவாசிக்கும் ஒவ்வொரு விசுவாசமும்- எள்ளளவும்கூட சந்தேகிக்கவேண்டாம். உங்களுக்கும், தேவன் உங்களுக்கென வைத்துள்ள ஆசீர்வாதத்திற்கும் நடுவேயுள்ள கதவை உங்களால் திறக்கமுடியும். அந்தத் திறவுகோலை நாம் பெற்றுக்கொள்ளக் கர்த்தர் நமக்குத் துணைபுரிவாராக என்பதே என் விண்ணப்பமாயுள்ளது. இப்பொழுது ஜெபத்திற்காக நாம் தலை - வணங்குவோம். 50எங்கள் பரலோகப் பிதாவே, இரட்சிப்பைத் திறந்து பெற்றுக் கொள்வதற்கென எங்களிடம் திறவு கோலைத் தந்தருளினதற்காக இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் இரட்சிக்கப்பட்டதற்காகவும், இதுவரையிலும் அந்த திறவு கோலை எங்களால் உபயோகிக்க முடிந்தமைக்காகவும், ஆண்டவரே, உமக்கு நன்றி சொல்கிறேன். ஆண்டவரே, இப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சிறு நெம்புகோல் என்றும், இயேசுவே வாசல் என்றும், விசுவாசம் என்னும் திறவுகோல் ஒவ்வொரு வார்த்தையையும் தொடும்போதும் அது திறக்கிறது என்னும் விசுவாசத்தை எங்களுக்குத் தாரும். அது நெம்புகோல் ஒவ்வொன்றையும் கீழே தள்ளுகின்றது. அப்பொழுது. நாங்கள் அந்த ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்கிறோம். பரலோகப் பிதாவே, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் எங்களுக்கு, விசுவாசம் உண்டாயிருக்கவும், எங்கள் விசுவாசம் ஒழிந்து போகாமலிருக்கவும், உமக்கும் உம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஊழியம் செய்வதற்காகவும், எங்களுக்கு அந்தத் திறவுகோலைத் தரவேண்டுமாய் கெஞ்சுகிறோம். ஆண்டவரே, அவிசுவாசமாகிய எங்கள் பாவத்தை தயவாய்... மன்னித்து, நாங்கள் உம்முடையவர்களாயிருக்க உதவிபுரியும், நாங்கள் இராப்போஜன மேசையருகில் வரப்போகிறோம். பரலோகப் பிதாவே, எங்கள் குற்றங்கள் யாவையும் மன்னித்து, தேவனுடைய மேசையைச் சுற்றிலும் நாங்கள் பெறவிருக்கும் அந்த ஐக்கியத்தின் மகிழ்ச்சிக்குள் நாங்கள் பிரவேசிக்கக் கிருபையருளும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 51என் சகோதரனே, சகோதரியே, இராஜ்யத்தின் திறவுகோல் வாசலின் திறவுகோல், இரட்சிப்பின் திறவுகோல் உன்னிடம் இருக்குமானால், நீங்கள் கதவுகளைத் திறந்து, இயேசுவை “உள்ளே அனுமதிக்கத் தேவன் உதவிபுரிவாராக உங்கள் வாஞ்சைகளை அவர் பூர்த்தி செய்வாராக. இராப்போஜனத்தைக் குறித்த வேதவாக்கியங்களைப் படிக்கும் முன்பு, ஒரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில் இது இராப்போஜன ஆராதனையாயிருக்கிறது. இந்த பீடத்தின் முன்னால் வரவேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழியுண்டு. அதாவது, நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நமக்குத் தெரிவிக்கும் விசுவாசத்தின் திறவு கோலை நமது கைகளில் நாம் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். கதவைத் திறக்க ...அதாவது, நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டடன என்பதன் அறிகுறியாக - நம்மிடம் திறவுகோல் இல்லையென்றால், கர்த்தருடைய மேசையில் பங்குகொள்ள நாம் பாத்திரவான்களல்ல. என்னத்தினாலெனில், அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம். இன்ன தென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு: வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். அது உண்மை. 52இன்று தேசிய இராப்போஜன தினம் என்பது நம் மனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். எல்லா சபைகளும், தேசம் முழுவதும் ஆசரிக்கும் தேசிய இராப்போஜன தினம். போதகர் கர்த்தருடைய இராப்போஜனத்திற்குரிய வேதவாக் கியங்களைத் தேர்ந்தெடுக்கும் இந்நேரத்தில், இராப்போஜனத் தைப்பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் கூறுவது பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த இராப்போஜனம்.... பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொள்ள மாட்டேன். 53இப்பொழுது நாம் பங்குகொள்ளப்போகும் இந்த இராப்போஜனம், வேதத்திலுள்ள போதகங்கள் அனைத்திலும் மிகவும் தர்க்கமுள்ள போதகமாக அமைந்துள்ளது. ஆதி சபை யிலும் கூட ஏற்பட்ட தர்க்கங்களில் இது ஒன்றாகும். இன்று எபிஸ் கோபலியரும், மெதோடிஸ்டுகளும், மற்றைய பிராடெஸ்டெண்டு ஸ்தாபனங்களும் ரோமன் கத்தோலிக்கரும் போதகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இராப்போஜ னத்தைக் குறித்தமட்டில் அவர்களிடையே வேறுபாடு காணப் படுகின்றது. போதகர்கள் விவாகம் செய்து கொள்ளலாமென்று கத்தோலிக்க சபை அனேக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஆமோதம் தெரிவித்தது. கத்தோலிக்கர் ஏறெடுக்கும் வெவ்வேறு ஜெபங்களையும் பிராடெஸ்டெண்டு சபை ஒருக்கால் ஏற்றுக் கொள்ளும். கத்தோலிக்கர் போதனை (Catechism), பீடம் (altar) வைத்தல் போன்றவைகளில் இருதிறத்தாரிடையே உடன் பாடு காணப்படலாம். ஆனால் இராப்போஜன விஷயத்தில் அவர்களிடையே உடன்பாடு இல்லை. சரித்திரம் அறிந்தவர் அனை வருக்கும் இது தெரியும். என்னைப் பொறுத்தவரையில், அவர்களை நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அனேக காரியங்களை விட்டுவிடவேண்டும். ஏனெனில் அவை வேதத்துடன் இணங்குவதில்லை. 54கத்தோலிக்க சபைக்கு ஒன்றைக் கூறவிரும்புகிறேன், ஆதியிலே கத்தோலிக்க சபை தான் அப்போஸ்தல பெந்தே கோஸ்தே சபையாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக. அதுதான் சபையின் தொடக்கமாக இருந்தது. இப்பொழுது அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஒவ் வொன்றாக அகற்றி, அதற்குப் பதிலாகத் தங்கள் கோட்பாடு களைப் புகுத்தினர். இன்றுள்ள பெந்தேகோஸ்தே சபையின் போக்கைக் காணும்போது, அது மாத்திரம் இன்னும் நூறாண்டு காலம் நீடிக்குமானால், கத்தோலிக்க சபை இன்றுள்ள நிலையைக் காட்டிலும் அதிகமாக, அவர்கள் வேதத்தினின்று அகன்று சென்றிருப் பார்கள். தேவனுடைய வார்த்தையினின்று விலகிச் செல்ல, கத்தோலிக்க சபைக்கு அனேக நூற்றாண்டுகள் பிடித்தது. ஆதி சபையின் காலம் தொடங்கி ரோமன் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்ட வரை, முன்னூறு ஆண்டுகள் கழிந்தன. அவர்கள் கௌரவமுள்ளவர்களை உள்னே கொண்டு வந்து, சில போதகங்களை அகற்றி, வேறு சிலவற்றை நுழைத்து. அஞ்ஞானிகளின் சிலைகளை அகற்றி, கிறிஸ்தவர்களின் சொரூபங்களைப் புகுத்தி, இவ்விதம் அஞ்ஞான மார்க்கத்துடன் ஒப்புரவாகி, படிப்படியாக தற்பொழுதுள்ள நிலையையடைந்து விட்டனர். இப்பொழுதுள்ள பெந்தேகோஸ்தே சபை ஐம்பது ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.. அது தொடங்கின முதற் கொண்டு, தற்பொழுது அது பெற்றுள்ள விழுந்த நிலைமையைப் பார்க்கும் போது, இன்னும் நூறாண்டு காலத்தில் அது கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மோசமான நிலையை யடைந்திருக்கும். அது உண்மை . நான் கூறுவது பெரிய சொற்க ளாகத் தென்படலாம்.ஆனால் அவர்கள் எந்நிலையிலிருந்து விழுந்திருக்கின்றனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு, இதனுடனும் அதனுடனும் ஒப்புரவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பின் வாங்கிப் போனார்கள். 55இராப்போஜனம்' என்பது 'கர்த்தருடைய இராப்போஜனம்' என்று அழைக்கப்படுகின்றது. அனேகர் அதைக் காலை நேரக்தில் ஆசரிக்க விரும்புகின்றனர். அது கர்த்தருடைய காலை போஜனம்' என்று வேதத்தில் கூறப்படவில்லை. அவர்கள் எவ்வாறு அதை இன்னும் 'கர்த்தருடைய இராப்போஜனம்' என்று அழைக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அவ்வாறு அழைப்பதுமில்லை. இராப்போஜனம் என்று அழைப்பதை அவர்கள் விட்டு விட்டு, 'மதிய ஆகாரம்' என்றழைக்கின்றனர். அர்த்தமற்ற காரியம். அது . இராப்போஜனம்' வேதத்தின் காலங்கள் தோறும் அது சர்ச்சையான விவகாரமாகவே அமைந்து வந்துள்ளது. மேஜையின் அருகில் வந்த மக்கள், கர்த்தருடைய இராப்போஜனத்தைத் தவறாகப் புரிந்து கொணடனர். கொரிந்து சபையார். கர்த்தருடைய மேஜைக்கு வந்து, குடித்து வெறித்தனர். பாருங்கள், அக்காலத் திலேயே அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. எனவே பவுல், நீங்கள் சாப்பிட வேண்டுமானால், வீட்டிலேயே சாப்பிடுங்கள்'' என்கிறான். 56வேறொரு காரியம் - அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று அறியாமல், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. பாவிகள் பாவத்தில் வாழும் மனிதர்- இராப்போஜனத்தில் பங்கு கொண்டனர். மாற்றாந்தாயுடன் மோசமான வாழ்க்கை நடத்திய மனிதன் ஒருவனிடம், சபையானது அவனுடைய பாவ வாழ்க்கையை உணர்த்தின பின்பும், அவன் இராப்போஜன மேசைக்கு வந்து அதில் பங்கு கொண்டான். அவர்களிடையே பிரிவினை உண்டாயிருந்தது. எனினும் அவர்கள் இராப்போஜனத்தில் பங்கு கொண்டனர். பவுல் அவர்களை நோக்கி, நீங்கள் புறஜாதியாரான மற்ற வரைப் போல் நடந்து கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளே பிரிவினை காணப்படுகின்றது. - முக்கியமாக கேபாவின் வீட்டில் உள்ளது போல'' என்றான். 'நீங்கள் புறஜாதியாரான மற்றவரைப் போல் நடந்து கொள்கிறீர்கள்'' என்றான் அவன். பாருங்கள், இராப்போஜனம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. 57இராப்போஜனம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயமாகவே எக்காலத்தும் இருந்து வந்துள்ளது. அதைக் குறித்து மணிக்கணக்காக பேசிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் நாம் இராப்போஜனத்திற்கும் பாதங்கள் கழுவு தலுக்கும் இப்பொழுது வரவேண்டியவர்களாயிருக்கிறோம். அவர்கள் பாதங்கள் கழுவுதலை அறவே புறக்கணித்துவிட்டனர். பெந்தேகோஸ்தேயினர் அனேகர் அதைத் தள்ளி வைத்து விட்டனர். ஆனால் இன்றைக்கும், அது எழுதப்பட்ட விதமாகவே, வேதத்தில் காணப்படுகின்றது. ரோமன் கத்தோலிக்க மார்க்கம் இதனை 'இராப்போஜனம்' என்று அழைப்பதில்லை. அவர்கள் அதை பரிசுத்த மாஸ்' (Holy Mass) - என்றழைக்கின்றனர். அவர்கள் இராப்போஜனம் ஆசரிப்பதில்லை. பதிலாக அவர்கள் மாஸ்' என்பதையே ஆசரிக்கின்றனர். 'மாஸ்' என்பது இராப்போஜனத்தின் உண்மையான அர்த்தத்தைக் குலைத்து விடுகின்றது. 'மாஸ்' என்னும் சொல் 'நம்பிக்கை ' என்று பொருள்படும். பாஸ்' என்பதில் பங்கு கொள்வதன் மூலம் தேவன் அவர்களுடைய. பாவங்களை மன்னித்து விடுகிறாரென்று அவர்கள் நம்புகின்றனர். இந்த அப்பத்தையும் திராட்சரசத்தையும் - கத்தோலிக்க பாதிரியார் தமது ஜெபத்தினால் இயேசுவின் உண்மையான சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றி விடுகிறாரென்றும், அதில் பங்கு கொள்வதனால் தேவன் அவர்களுடைய பாவங்களை மன்னித்து விடுகிறார் என்னும் நம்பிக்கையை அவர்கள் கொண்டி ருக்கின்றனர். அது ஒரு மாஸ்' 58பிராடெஸ்டெண்டுகள் அதை 'கம்யூனியன்' (Communion) என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். அதற்கு 'நன்றி தெரிவித்தல்' என்று பொருள். கத்தோலிக் கர்கள் 'மாஸ்' என்பதில் பங்குகொண்டு, அவர்களுடைய பொல்லாங்கு அனைத்தையும் தேவன் மன்னித்து விடுவதாக நம்புகின்றனர். ஆனால் பிராடெஸ்டெண்டுகள், தாங்கள் ஏற்கனவே தேவனுடன் கொண்டுள்ள ஐக்கியத்திற்காக நன்றி தெரிவிக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே அவருடன் ஐக்கியங் கொண்டுள்ளனர். கத்தோலிக்கன் அது இப்பொழுது தான் நடைபெறுவதாக எண்ணுகிறான். ஆனால் பிராடெஸ் டெண்டோ அது ஏற்கனவே நடந்து விட்டதாகக் கூறுகிறான். கத்தோலிக்கன் தனது பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதா என்று சந்தேகம் கொள்கிறான். ஆனால் பிராடெஸ்டெண்டோ, அது ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டதென்றும், அவன் அதனின்று விடுதலையாகி விட்டானென்றும் அறிக்கை செய்கிறான். இராப்போஜனம் என்பது தேவனுடன் ஐக்கியங்கொள்ளுதலைக் குறிக்கிறது. நாம் உட்கொள்ளும் இப்பொருட்கள். நமது பாவம் மன்னிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிப்பதற்காக அல்ல: நமது பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டது என்னும் விசுவாசத்தின் அடையாளமாக அது அமைந்துள்ளது. ஒன்று நம்பிக்கை, மற்றொன்று விசுவாசம். ஒருவன், தான் சரியென்று நம்புகிறான். மற்றவன் அவன் சரியென்று திட்டவட்டமாக அறிந்திருக்கிறான். பாருங்கள்? ஒருவன், தான் எந்நிலையில் இருக்கிறான் என்பதை அறியாததனால், நம்பிக்கை தெரிவிக்கிறான். மற்றவனோ அவன் சரியென்று திட்டவட்டமாக அறிந்திருக்கிறான். ஏனெனில் அதைக் குறித்து தேவன் என்ன கூறியுள்ளார் என்று அவனுக்குத் தெரியும். அது தான் வித்தியாசம். நீங்கள் நம்பிக்கை மாத்திரம் தெரிவிப்பவர்களாயிருந்தால், கவனமாயிருங்கள். ஆனால் நீங்கள் திட்டவட்டமாக அறிந்திருந்தால், தொடர்ந்து முன்னேறுங்கள். அப்பொழுது நீங்கள் தேவனுடன் ஐக்கியங் கொண்டவர்களாயிருப்பீர்கள். தான் மன்னிக்கப்பட்டு விட்டதாக பிராடெஸ்டெண்டு கூறுகிறான். அது அவனுக்குத் தெரியும். கத்தோலிக்கன் 'மாஸ்' என்பதை ஆசரிக்கிறான்; அதனால் தான் மன்னிக்கப்படுவான் என்று நம்புகிறான். இது இவ்விதமாயுள்ளது: ஒருவன் எல்லாம் சரியாக அமையும் என்று நம்பும் பிச்சைக்காரன்; மற்றவன் ஏற்கனவே நடந்த ஒன்றிற்காக நன்றி செலுத்தும் பிச்சைக்காரன். இருவரும் பிச்சைக்காரர்களே. ஆனால் ஒருவன், கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் பிச்சையெடுக்கிறான்; மற்றவனோ அவனுக்குக் கிடைத்துவிட்டது என்றறிந்து, அதைத் தந்தருளின தற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்து கிறான். அது தான் வித்தியாசம் , அது தான் உண்மையான இராப்போஜனம். ஆம், ஐயா. ஒருவன், தான் மன்னிக்கப்படுவா னென்று நம்பியிருக்கிறான்; மற்றவன் ஏற்கனவே மன்னிக்கப் பட்டு விட்டான் என்றறிந்து, அவருக்குத் துதி செலுத்துகிறான். 59எனவே இராப்போஜனம் என்பது தேவனுடைய ஆவிபினால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கே உரியது. 'மறுபடியும் பிறத்தல்' என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியை அவசியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. கவனியுங்கள், அனேகர் அவ்விதம் போதிக்கின்றனர். சகோ. ஆர்கன் பிரைட் அன்றிரவு பிரசங்க பீடத்திலிருந்து கூறியது போன்று, 'அவ்விதம் போதிப்பவர் யாரையும் எனக்குத் தெரியாது.'' மறு பிறப்பு என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது அல்ல. வேதவாக்கியம் அத்தகைய கருத்தை ஆதரிப்பதில்லை. என்னைப் பொறுத்த வரையிலும், அது அவ்விதம் இல்லையென்று தான் நினைக்கிறேன். 60எனவே தான் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்' என்னும் வாக்கை மாத்திரம் நான் ஞானஸ் தானத்தின் போது கூறுகின்றேனேயன்றி, மறுஜென்மத் திற்காக (regeneration) நான் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை. ஐக்கிய பெந்தேகோஸ்தே சபை அவ்விதம் மறு ஜென்மத்தித் காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக் கிறது. ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அவர்கள் வேண்டுமானால் அப்படிச் செய்யட்டும். பேதுரு முதலாவதாக மனந்திரும்பி' என்று சொன்னான் என்பதை நான் விசுவாசிக் கிறேன். தண்ணீர் உங்கள் பாவங்களை போக்க முடியாது. கிறிஸ்துவின் சபை (Church of Christ) அவ்விதம் போதிக்கின்றது. ஆனால் நானோ. மனந்திரும்புதல், பயபக்தியுள்ள விசனம் (godly sorrow) என்பதில் நம்பிககை கொண்டுள்ளவன். “மனத்திரும்புதல். என்றால், முன்பிருந்த இடத்திற்குத் திரும்ப செல் என்று அர்த்தம். நீ குறி தவறி விட்டாய். எனவே எல்லாவற் றையும் ஆரம்பத்திலிருந்து மறுபடியம் செய்! - அதை முதலில் செய். உங்கள் உள்ளத்தில் ஒரு கிரியை நடந்து நீங்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை இவளிப்படையாய் அறிவிப்பதே தண்ணீர் ஞானஸ்நானமாகும். 61இன்று இங்கு கூடியிருப்பவர் நமது சபையோர் மாத்திரமே என்று நினைக்கிறேன். யார் வருகிறார்கள், யார் வருவ தில்லை என்பதை அறிந்து கொள்ள நான் இங்கு போதிய சமயம் இருப்பதில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு வயோதிபருக்கு இந்த தண்ணீர் குளத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டேன். நான் அவரிடம் சென்றிருந்தேன். அவர் நற்குணம் படைத்த வயோதிபர். அவருடைய குடும்பத்தி லுள்ள அனைவரையும் கிறிஸ்துவினிடம் வழி நடத்தின சிலாக் கியம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர் கள். இவர் மிகவும் நல்லவர். அவரிடம் நான் பிரியம் கொண் டேன். எனவே நான் அவரிடம் சென்று, 'தகப்பனாரே, நீர் ஏன் கிறிஸ்தவராக ஆகக் கூடாது?'' என்று கேட்டேன். அவர், சகோ. பிரான்ஹாமே, நான் போதிய அளவு நல்லவனான பின்பு கிறிஸ்தவனாக ஆவேன்'' என்றார். நான், 'தகப்பனாரே, அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறட்டுமா? நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு , எந்த ஸ்தலத்தில் நீங்கள் நல்லவராக முடியும் என்று எனக்கு கூறுங்கள். நானும் அங்கு செல்ல விரும்புகிறேன். கிறிஸ்து நல்ல மனிதனை இரட்சிக்க வரவில்லை ; கெட்டவர்களையே இரட்சிக்க வந்தார்'' என் றன். ஒருவன் தன்னை நல்லவன் என்று எண்ணிக் கொண்டால், அவனை இரட்சிக்கும்படியாக இயேசு வரவில்லை. தங்களைப் பாவிகள் என்று கருதுபவரை இரட்சிக்கவே அவர் வந்தார். பாருங்கள்? பாவிகளை இரட்சிக்கவே அவர் வந்தார். பாருங்கள்? பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து மரித்தார். மேலும் நான் அவரிடம், தகப்பனாரே. இங்கு ஞானஸ்நானத்திற்காக ஒரு வரிசை நின்று கொண்டிருக்கிறது' என்றேன். அவரோ, “நான் புகை பிடிக்கிறேனே'' என்றார் . நான், அதைக் குறித்து நான் பேசவும் கூடப் போவ தில்லை'' என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, அதை விட்டுவிட நான் முயற்சி செய்கிறேன்'' என்றார். நான்; '' 'சரி, நான் சிகரெட்டைக் குறித்துப் பேசப் போவ: தில்லை'' என்றேன். அவர், “என்னால் விட முடிந்த பிறகு......'' என்றார். நான், அதைக் குறித்து ஒன்றும் பேசவேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்' என்றேன். அவர், சரி, என்ன?'' என்றார் நான், “தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்கின்றீர் களா?'' என்று கேட்டேன். அவர், '' நிச்சயமாக சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எவ்வளவு உறுதியாய் நம்புகிறீர்களோ, அவ்வளவு உறுதியாய் நானும் நம்புகிறேன்'' என்றார். நான், தேவன் தமது வம்சத்தை விட்டு வந்து, மனிதனை இரட்சிப்பதற்கென மாமிசமாகி, இயேசுகிறிஸ்து என்னும் நபராக நமது மத்தியில் வாசம் செய்தார் என்று விசு வாசிக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அவர், 'ஆம், நான் விசுவாசிக்கிறேன்'' என்றார். '' உம்மையும் என்னையும் போன்றவர்களை இரட்சிக்க அவர் மரித்தார் என்று விசுவாசிக்கிறீர்களா?'' என்றேன். ஆம், நான் விசுவாசிக்கிறேன்'' நான் அவரிடம், 'நாமெல்லாரும் ஒரு சிறையில் அடைபட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். நான் இந்த மூலையில் நின்று கொண்டு, இதனின்று விடுபட இது உதவி செய்யும் என்போனால், அதனால் ஒரு உபயோகமுமில்லை. நாமனை வரும் ஒரே நிலையில் இருக்கின்றோம். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்யைப் பேசிக் கொண்டே இவ்வுலகில் தோன்றுகிறான். அவன் தொடக்கத்திலிருந்தே தேவனுடைய சத்தியத்தைக் கைவிட்ட வனாயிருக்கிறான்' ' என்றேன். 62அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், இன்றுள்ள ஆதாம், ஏவாள் சந்ததியார் அவர்களைப் போலவே நிர்வாணமாக நடந்தால், ஏதாவது வித்தியாசம் காணப்படுமா? இவர்களுடைய சரீரங்கள் அவர்களுடைய சரீரங்களைப் போலவே இருக்குமா?'' என்று கேட்டார். நான். 'இல்லை, ஐயா'' என்றேன். அப்பொழுது சகோ, ஃபிரெட்டும் நானும் வேறு சிலரும் அணில். வேட்டை யாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். 'காண்பதற்கு அவை ஒன்றாகவே இருக்காது'' என்று பதிலளித்தேன். அவர், ''ஏவாள் தன் குமாரத்திகளைப் போன்று பெண்ணாகவும், ஆதாம் தன் குமாரரைப் போன்று ஆணாகவும் இருக்கவில்லை என்றா கூறிகிறீர்கள்?'' என்று கேட்டார். நான், 'அனேக விதங்களில் அவர்கள் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள். ஆனால் சரீர அமைப்பு எல்லாவற்றிலும் அப்படி இருக்காது'' என்றேன். அவர், ''என்ன வித்தியாசம்?'' என்று கேட்டார். நான், அவர்களுக்குத் தொப்புள் கிடையாது. ஏனெனில் அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டனர் அவர்கள் எதனுடனும் இணைக்கப்பட்டிருக்கவில்லை'' என்றேன். தொப்புளுடன் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவனும் தொடக்கத்திலேயே தேவனுடைய சத்தியத்தைக் கைவிட்ட வனாயிருக்கிறான். நான் அவரிடம், 'நிச்சயமாக வித்தியாச முண்டு. அவர்களுக்குத் தொப்புள் கிடையாது. இவ்வுலகில் வருவதற்கு அவர்கள் எந்த ஸ்திரீயுடனும் இணைக்கப்பட்டிருக்க வில்லை'' என்றேன். பாருங்கள், தேவன் அவர்களை சிருஷ்டித்தார். 63நான் அந்த வயோதிபரிடம், “ஒன்று கூற விரும்புகிறேன். இந்தச் சிறையிலுள்ள எவராவது பரிசுத்தரா? யார் இனசேர்க்கையின் காரணமாகப் பிறவாதவர்? ஒருவன் எவ்வளவுதான் பெரியவனாக இருப்பினும், அவன் எங்ஙனம் மற்றொ ருவனுக்கு இவ்விஷயத்தில் துணை புரிய முடியும்? நாமெல்லாரும் ஒரே சிறையில் அடைப்பட்டிருக்கிறோம். தேவன், அவருடைய சிருஷ்டியில் ஒருவராக தம்மை ஆக்கிக்கொண்டு, தமக்கென பரிசுத்த இரத்தத்தை சிருஷ்டித்துக் கொண்டு, இனசேர்க்கைக்கு அப்பாற்பட்டவராய் இவ்வுலகில் தோன்றி, அந்த பரிசுத்த இரத்தத்தின் மூலம் நம்மை இரட்சித்தார். தகப்பனாரே, இதை விசுவாசிக்கிறீரா?'' என்று கேட்டேன். அவர், விசுவாசிக்கிறேன்'' என்று விடையளித்தார். நான், 'கிறிஸ்து உம்மைப்போன்ற கெட்டவர்களுக் காகவே மரித்தார். செய்யவேண்டிய ஒன்று மாத்திரமேயுண்டு. உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. அவர் உங்களுக்குத் தருகிறார். நீங்கள் அதற்குப் பாத்திரவானல்ல. உம்முடைய நற்கிரியைகளினால் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் இலவசமாக உங்களுக்குத் தருகிறார். நரகத்தினின்று உம்மை விடுவித்துக் கொள்ள, அவர் உங்களுக்காகச் செய்துள்ளதை நீர் ஏற்றுக்கொள்வீரா?“ என்றேன். அவர். '' நான் அப்படியே செய்வேன்' என்று சொல்லிவிட்டு இந்த சிகரெட்டை மாத்திரம் என்னால் விடமுடிந்தால்'' என்றார். 131: நான், இந்த சிகரெட்டுகள் தம்மை தாம் கவனித்துக் கொள்ளும். நீங்கள் மாத்திரம்...'' (நான் சட்டத்தைக் “கடைபிடிப்பவன் (legalist) அல்ல. நான்' கிருபையின் மீது - நம்பிக்கை கொண்டிருக்கிறேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்''.) நான் மேலும், ' உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால்'' என்றேன். அவர், ''என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்'' என்றார். ''அப்படியானால், நீங்கள் அபாத்திரர்; அவர் மாத்திரமே பாத்திரர் என்னும் அடிப்படையில் இதை ஏற்றுக் கொள்வீர்களா? உங்களை நீங்கள் நோக்கிப் பார்க்க வேண்டாம். அவரை நோக்கிப் பாருங்கள். ஏனெனில் நீங்களாக உங்களுக்கு 'ஒன்றும் செய்து கொள்ள முடியாது. உங்களுக்காக ஏதோ ஒன்றைச் செய்த அவரை நோக்கிப் பாருங்கள். அவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''ஓ, அவர் பாத்திரவானாயிருக்கிறார்.'' என்றார். நான், ஆமாம், அப்படியானால் அவர் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றேன். அவர், ''நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்'' என்று பதிலளித்தார். அவருக்கு நான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர் குளத்தினின்று வெளியே வந்து சிகரெட்டைப்பற்ற வைத்தார். 64சில வாரங்களுக்கு முன்பு அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒரு இரவு நான் தரிசனம் ஒன்றைக் கண்டேன். அதில் ஒரு பச்சை மரம் வெட்டப்பட்டு தலை கீழாக திருப்பப்பட்டிருந்தது. அந்த மரத்தில் பலகைகள் ஆணியடிக்கப்பட்டிபருந்தன். கடைசிபலகைக்கு முன்பிருந்த பலகை குறிப்பிடத்தக்கது. அதன் கீழே, மரம் இவ்விதம் இரண்டாகப்பிளந்திருந்தது. ஒரு சத்தம் என்னிடம், ''அது. நீயாக இருந்திருக்க வேண்டும் என்றது. அந்த காக்ஸ் தகப்பனார் கீழே விழுந்து.. முதுகு பிளந்தது அடுத்த நாள்காலையில் அவருடைய படுக்கையில் கிக்ரெட்டுகள் கொண்டுவந்து கொடுத்தனர். ஆனால் 'சிகரெட்டு பிடிக்க வேண்டு மெனும் ஆசை அவரை விட்டுப் போய் விட்டது: அது சில வாரங்களுக்கு முன்பு! இதுவரை அவர் ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை. அவருக்கு ஒன்றும் அவசியமில்லை. - பாருங்கள்! சற்று முன்பு தான் அவரைச் சந்தித்தேன். சிகரெட், பிடித்து அவருடைய கைகள் முழுவதும் பழுப்பு நிறமாக மாறியிருந்தது. ஆனால் இப்பொழுதோ ஒரு சிகரெட் அவரருகில் இருப்பதையும் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முதல் காரியங்களை முதலாவது செய்யுங்கள், நல்லவராக ஆக்கமுயல வேண்டாம். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே கெட்டவர்கள் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது பிரிக்கும்கோடு ஒன்றுள்ளது. மானிடவர்க்கம் அனைத்தும் அந்த பக்கத்தில் உள்ளது. 65என் தகப்பனாருக்கும் தாயாருக்குமிடையே ஏற்பட்ட பரிசுத்த விவாகத்தின் மூலம் நான் இவ்வுலகில் பிறந்தேன். அவளுடைய கர்ப்பத்தில் ஒரு முட்டை இருந்தது. என் தகப்பனாரின் சுரப்பிகளில் ஒரு இரத்த அணு இருந்தது. என் ஜீவன் என் தகப்பனாரின் இரத்த அணுவிலிருந்து தோன்றினது, (என் தாயாருடைய முட்டையிலிருந்தல்ல) அந்த இரத்த அணு அந்த முட்டையைச் சந்திக்க குறித்த இடத்திற்குச் சென்றபோது எனக்கு ஒரு சரீரத்தை அளிக்கவேண்டுமென்று தேவன் இயற்கைக்குக் கட்டளையிட்டிருந்தார். அதன் விளைவாக நான் மானிடவர்க்கத்தில் பிறந்தேன். அறிவுள்ள ஒரு நபராக ஆவதற்கு எனக்கு அப்பொழுது தருணம் அளிக்கப்பட்டது. அதனால் எனக்குக் கார் ஓட்டுதல், மற்றும் மனிதர் புரியும் மற்ற செயல்களான நடத்தல், பேசுதல் போன்றவைகளை என்னால் செய்ய முடிகின்றது. ஏனெனில் நான் மானிட குடும்பத்தில் பிறந்து, அதனால் ஒரு மனிதனுக்குள் இருக்கும் அறிவின் சக்தி எனக்கும் அளிக்கப்பட்டது. 66அது போன்று, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவனாக பிறந்த போது நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் வந்தேன். அந்த இரத்தம் எனக்கு ஜீவனையளித்தது. கிறிஸ்துவுக்குள் நான் பிழைத்த பிறகு, அவர் என்னை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகித்து, என்னைத் தேவ புத்திரனாக்கினார். எவ்வாறு ஒரு மனிதன் நடந்து, பேசி, கார் ஓட்டமுடியுமோ, அவ்வாறே பரிசுத்த ஆவியை நான் பெற்றுள்ள காரணத்தால், பிசாசுகளை ஓட்டவும், அன்னிய பாஷையில் பேசவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், வியாதியஸ்தரை சுகப்படுத்தவும் எனக்கு வல்லமையளிக்கப்பட்டுள்ளது. நான் அபிஷேகிக்கப்பட்டேன்! பிறக்கவில்லை. ஆனால் அபிஷேகிக்கப்பட்டேன்! அவர்கள் மேல்றையில் கூடி, அவருடைய நாமத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டனர். ஊழியம் செய்வதற்காக வல்லமை தோன்றினது'' ஆமென். 67நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசித்து, உங்கள் விசுவாசத்தின் காரணமாக மறுபடியும் பிறக்கின்றீர்கள். யோவான் 5:24ல் இயேசு, ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று கூறினார்- பரிசுத்த ஆவியல்ல, நித்திய ஜீவன். அவன் தேவனுடைய குடும்பத்தில் பிறக்கிறான்; அதன் பின்பு பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, விசுவாசத்தின் அறிவானவல்லமையைப் பெற்று, அதனால் சுவிசேஷத்தை விசுவாசிக்கவும், அதைச் சரிவர கிரியை செய்யவைக்கவும் அவனால் முடிகின்றது. ஆமென். அப்பொழுது அவன் தேவபுத்திரனைப் போல் நடந்து கொள்கிறான். அவனால் பிசாசுகளைத. துரத்த முடிகின்றது. ''விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன“ என்று இயேசு கூறினார். பாருங்கள்? என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள் . சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது' (மாற். 16:17 - 18). பாருங்கள், இவைகளைச் செய்வதற்கு அவன் பரிசுத்தாவியின் வல்லமையைப் பெறுகிறான். 68இயேசு இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, ''நான் போவது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் (பரிசுத்த ஆவியானவர்) உங்களிடத்திற்குவரார்'' (யோவான் 16:7) என்று கூறிச்சென்றார். அவர் வந்து பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் உலகத்தைக கண்டித்து உணர்த்தி வரப் போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் (அது தான் தரிசனங்கள்)'' (யோவான் 168,13) - ''நான் உங்களுக்குப் போதித்தவைகளை அவர் எடுத்துக் கொண்டு, அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். பரிசுத்த ஆவியின் அபிஷேகமில்லாமல், தேவனுடைய வார்த்தையை ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ள தாக ஒருவன் கூறிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தை சரியல்ல என்று அவன் விவாதித்தால், எங்கோ தவறுள்ளது. 69பவுல் புதிய ஏற்பாட்டைக் குற்றம் கண்டு பிடிப்பவனா யிருந்தான். (Critic). இல்லை, புதிய ஏற்பாடு அப்பொழுது எழுதப்படவில்லை பவுல்- அதாவது சவுலாக அவன் இருந்த போது- கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறை கூறுபவனாயிருந்தான். ஆனால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது. மூன்று ஆண்டு காலம் அவன் ஆசியாவில் கழித்து, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தான். ஏனெனில் அவன் கமாலியேல் என்னும் சிறந்த ஆசிரியரிடம் பயின்றவன். அவன் அங்கிருந்து திரும்பி வந்த பிறகு, பதினான்கு ஆண்டுகள் கழித்து, பேதுருவைச் சந்திக்க எருசலேமுக்குச் சென்றான். அங்கு வார்த்தைக்கு வார்த்தை அதே சுவிசேஷம் அங்குமிருப்பதை அவன் கண்டான். எந்த தேவன் பேதுருவை பெந்தேகோஸ்தே நாளன்று பிரசங்கிக்கச் செய்து, அவர்கள் மனந்திரும்பி இயேசுகிறிஸ்து வின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டு மென்று கூறச் சொன்னாரோ, அதே பரிசுத்த ஆவியானவர் அமீக காரியத்தைப் பவுலுக்கு வெளிப்படுத்தித் தந்து,.. அப்போஸ்தலர் 19 ல், 'நீங்கள் மறுபடியும் இயேசுகிறிஸ்துவின் நா பத்தில் ஞானஸ் நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கூற வைத்தார். 70பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியங்களுடன் சரியாக இணைந்திருக்கிறார். விசுவாசம் தான் . இந்த வேதவாக்கியங்களில் அடங்கியுள்ள இரகசியங்களைத் திறந்து கொடுக்கிறது. ஆமென். 1 யோவான் 5;7ல், 'பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அது இயேசு), பரிசுத்த ஆவி என்பவர்களே, இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகின்றது.'' பூலோகத்திலே சாட்சியீடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம் மூன்றும் (ஒன்றல்ல, ஆனால் ) ஒருமைப்பட்டிருக்கிறது (agree in one)'' குமாரனில்லாமல் உங்களுக்குப் பிதா இருக்கமுடியாது. அவ்வாறே பரிசுத்த ஆவி இல்லாமல் உங்களுக்கு குமாரன் இருக்கமுடியாது; அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த மாகுதல் (Sanctified) இல்லாமல் நீங்கள் நீதிமான்களாக முடியும் Justified). அவ்வாறே பரிசுத்த ஆவியின்றி நீங்கள் பரிசுத்தமாக முடியும் (Sanctified). பரிசுத்தமாகுதல் எ ேபது இரத்தத்தினால் உண்டாகின்றது. . இரத்தத்தின் மூலம் ஜீவன் வருகின்து. பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமைசபைக்கு அளிக்கப்பட்ட வல்லமை . 71பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து'' (அப். 1:8) (ஆங்கிலத்தில், 'Ye shall reccive Power')—- நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது என்றல்ல. ''பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலன டைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவி லும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப் பீர்கள்' ' பாருங்கள்? பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பே, நீங்கள் வல்லமையைப் பெறுகின்றீர்கள். ஆனால் முதலில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும். அதுவே கிரியைகளை வெளிப்படையாக்கும் தேவனுடைய வல்லமை நீ மானிடனாக இருந் . மானிடனைப் போல் பேசுகின்றாய், நடக்கறாய், மற்ற செயல்களைப் புரிகின்றாய். நீ பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப் படும் போது, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக நடந்து கொள்ள உனக்கு வல்லமையளிக்கப்படுகின்றது. இன்றுள்ள மக்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்படவில்லை. எனவே அவர்கள் அத்தகைய செயல்கள் புரிவதில் வியப்பொன்று மில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்களானால், வித்தியாசமாக நடந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்'' என்று இயேசு கூறியுள்ளார். அவை குழப்பமாகவேயுள்ளன. நீங்கள் உண்மையான காரியங்களுக்குத் திரும்புங்கள். 72ஆகவே, நீங்கள் உத்தமமாய் நடந்து கொண்டு, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் அழைத்துக் கொணடால், கர்த்தருடைய பந்தியில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். இன்று. நாடு முழுவதிலும் இராப்போஜன ஆராதனை நடத்தப்படுகின்றது- சிலர். ஒரு விதமாகவும், வேறு - சிலர் வேறு விதமாகவும் அதை ஆசரிக்கின்றனர். ஆனால் அதை ஆசரிக்க வேண்டிய சிறந்த முறை, வேதவாக்கியங்களைப் பின்பற்றி, வேதாகம காலத்தில் அவர்கள் எவ்விதம் ஆசரித்தார் களோ, அதைக் கடைபிடித்து அவ்விதம் ஆசரிப்பதேயாம். அது நமக்குகந்தது. என்று எண்ணுகிறேன். - சகோ. நெவில், உங்களிடம் வேதாகமம் உள்ளதா? சகோ. நெவில் இப்பொழுது வேதவாச்கியங்களைப் படிப்பார். (1 கொரிந்தியர் 11 ம் அதிகாரம், 23ம் வசனம் முதல்'' என்று சகோ. நெவில் அறிவித்து விட்டு, தொடர்ந்து வேதவசனங் களைப் படிக்கிறார் - ஆசி). . நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன். என்ன வெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு; நீங்கள் வாங்கிப்புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப்பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். . ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்த பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ. அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து இந்த பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில்,. அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர்நித்திரையும் அடைந் திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக் கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தரால் சிட் சிக்கப் படுகிறோம்.'' கொரி 11:23-32 (கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட தமது வார்த்தையை ஆசீர் வதிப்பாராக) 73இது எக்காலத்தும் பரிசுத்தமான காரியமா யிருக் கிறது மிகவும் புனிதமான காரியம். மௌன ஜெபத்திற்காக இப்பொழுது நாம் தலை வணங்குவது நலமென்று எண்ணு கிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன். ஆண்டவரின் மரணத்தை இராப்போஜனத்தின் மூலம் நாம் நினைவுகூரப்போகும் இந்நேரத்தில், தேவன் அபாத்திரரான சிருஷ்டிகளாகிய நம்மேல் இரக்கமுள்ளவராயி ருக்க வேண்டு மென்று நாம் ஒருவருக்கொருவர் ஜெபம் செய் வோம். (சகோ. பிரான்ஹாம் மௌன . ஜெபத்திற்காக மௌனமாயிருக்கிறார். ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). எங்கள் பிதாவே, இந்தப் பாவ அறிக்கையின் ஜெபத்தை -நாங்கள். எங்கள் பலியுடன் உமது தங்க பலிபீடத்திற்கு ஏறெடுக்கிறோம். எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 74மூப்பர்கள் தங்கள் தங்கள் இடங்களில் நிற்பார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இராப்போஜனத்தை வரிசைவரிசையாகக் கொண்டு வருவார்கள். ''அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டி யானவரே, உம் விலையுயர்ந்த இரத்தம் ஒருக்காலும் அதன் வல்லமையை இழப்பதில்லை, கிரயத்திற்கு கொள்ளப்பட்ட தேவனுடைய சபை இரட்சிக்கப்பட்டு, இனி ஒரு போதும் பாவம் செய்வதில்லை'' என்னும் அந்த பாட்டை எப்பொழுதும் ஞாபகம் — கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தலைகளை வணங்குவோம். கிருபையும் பரிசுத்தமுள்ள பிதாவே, யேகோவாவே, சர்வவல்லமையுள்ளவரே, நாங்கள் காத்திருக்கும் இந்நேரத்தில் 'உம்முடைய ஆசீர்வாதங்களை ஜனங்களின் மேல் அனுப்புவீராக! - எங்கள் பாவங்களை மன்னியும். இந்த அப்பத்தையும், திராட்சரசத்தையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். திராட்சைப் பழங்கள். வளர்ந்து, போதகர்களின் கைகள் அதைப் பிழிந்து, திராட்சரசம் உண்டாக்கப்பட்டது. அது இயேசுகிறிஸ்துவன் இரத்ததிற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் அது திராட்சரசமாகப் பிழியப்பட்டு, அதை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம். பிதாவே, இந்நோக்கத்திற்காக இதைப் பரிசுத்தப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். இந்த திராட்சரசத்தைப் பருகும் ஒவ்வொருவரும் உம் மிடமிருந்து ஆரோக்கியத்தையும், பெலனையும் இரட்சிப்பையும் பெறுவார்களாக! ஆண்டவரே, இவைகளை அருளும். இயேசு வின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 75அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அதைப்பிட்டு, ''நீங்கள் வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்'' என்றார் என்று வேதம் கூறுகின்றது. புளிப்பில்லாமல் செய்யப்பட்ட இந்த அப்பத்துண்டுகளை நாம் புசிக்கிறோம் அது கிறிஸ்தவர்களால் செய்யப் பட்டு, கிறிஸ்துவின் சரீரத்திற்கு அடையாளமாயுள்ளது. கிறிஸ்துவின் காலத்தில், அல்லது சபையின் காலத்திலிருந்த சீஷர்கள், கிறிஸ்துவின் கடைசி இராப்போஜனத்தில் இதை ஆயத்தப்படுத்தினார்கள். அன்று முதல் வேதாகமத்தின் காலம் முழு வதிலும் சீஷர்கள் தாம் இவைகளை ஜனங்களுக்குப் பரிமாறி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும், நவீன சீஷர்களாகிய இந்த சகோதரர்கள் இந்நோக்கத்திற்கென எழுப்பப்பட்ட ஊழியக்காரர்கள் இப்பொழுது இந்த துண்டுகளை எடுத்து ஜனங்களுக்குக் கொடுப்பார்கள். 76நீங்கள் அப்பத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, அது ஆட்டுக்குட்டியானவருக்கு அடையாளமாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனேக ஆண்டுகட்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்களால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆட்டுக்குட்டி. நெருப்பினால் பொறிக்கப்பட்டு, கசப்பு கீரையுடன் புசிக்கப்பட்டது அவர்களுக்கு சரீர பலம் உண்டாயிருந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் அடையும் வரையிலும், அவர்களுடைய பிரயாணம் முழுவதிலும், அவர்களுடைய பாதரட்சைகள் தேய்ந்து போகவில்லை, அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகவில்லை. அவர் நமக்காக வாக்குத்தத்தம் செய்துள்ள தேசத்தை நாம் சுதந்தரிக்கும் வரையிலும், ஆண்டவர் தாமே நம்மையும் பெலத்துடனும், சந்தோஷத்துடனும் காத்துக்கொள்வாராக. நாம் ஜெபிப்போம். 77கிருபையுள்ள பரலோகப் பிதாவே, தேவத்துவம் பரிபூரணமாக சரீரப்பிரகாரமாக வாசம் செய்து பரிசுத்தமாயிருந்த ஆண்டவரின் சரீரத்தைக் குறித்து இன்றிரவு நான் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சரீரம் நொறுக்கப்பட்டு, இரத்தம் பீறிட்டு வெளி வந்து, அவர் முதுகில் பெற்ற சவுக்கடியின் விளைவால், அவர் முதுகும் விலாவெலும்புகளும் இரத்தம் தோய்ந்து பளபளப்பாக காட்சியளித்ததை நான் நினைக்கும் போது; இந்த சுருங்கின, அடித்து உண்டாக்கப்பட்ட அப்பம் அதற்கு அடையாளமாயுள்ளதை நினைக்கும்போது, எங்கள் இருதயங்களில் கல்வாரியின் கஸ்தியின் நினைவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆண்டவரே, எங்கள் இருதயங்களை இன்றிரவு உம் பீடத்தின் மேல் வைக்கிறோம். தேவனே, எங்களை மன்னியும். பிட்கப்பட்ட இந்த அப்பம், உமது ஊழியக்காரராகிய இவர்களுடைய வாய்களின் வழியாய் செல்லும்போது, உமது விலையேறப்பெற்றசர்ரம் அடிக்கப்பட்டு காயப்பட்டதென்றும். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறேம் என்பதையும் அவர்கள் உணர்த்து கொள்ளட்டும். ஆண்டவரே, இதை எங்களுக்கு அருள்வீராக. இந்த அப்பத்தை அதன் நோக்கத்திற்காகப் பரிசுத்தப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (ஒரு நிமிடம் பொறுங்கள்). இது ஒரு சிலருக்கு மாத்திரமுள்ள இராப்போஜனம் (Closed Communion) அல்ல. எங்ககளுடன் ஐக்கியங்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ விகவாசியும் கர்த்தருடைய மேசைக்கு வரும்படி வரவேற்கிறோம்.